உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆவார்கள். என்னைச் சந்திக்கின்ற நேரத்தில் எல்லாம் ஒரு முறையீடு- தொகுதியைப் பற்றிய நிலைகளை விவரித்து அதற்கு ஆவன செய்ய வேண்டும் என்கின்ற அளவிலே- வழங்குவது அவருடைய வாடிக்கை. அவற்றில் பலவற்றை அரசின் சார்பில் நிறைவேற்றிக் கொடுத்தாலும்கூட பலவற்றை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்தாலும்கூட அதற்கான விளக்கங்களை அளிக்கின்ற நேரத்திலே, அவை முன்னவர் குறிப்பிட்டதைப் போல, அதுகேட்டு ஆறுதல் அடையக் கூடியவர்; அதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்: அதற்காக சற்றும் சீற்றம் கொள்ளாதவர்; வருந்தாதவர். அவர் இளமைக் காலத்திலே யிருந்து துடிப்பான ஓர் இளைஞனாகத் திகழ்ந்து பல்வேறு தேகப் பயிற்சிகள். விளையாட்டுக்கள் இவற்றிலே ஈடுபாடு கொண்டு உடல் ஆரோக்கியத்தையும் நல்ல முறையிலே பாதுகாத்து வந்தவர்தான். எனினும் திடீரென்று இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. ஒரு பெரிய குடும்பம் அவருடைய குடும்பம் என்பதை இங்கு உள்ளவர்கள் எல்லாம் எடுத்துக் கூறினார்கள்.

நல்ல எளிமை, அதே அளவுக்குப் பழகுவதிலே இனிமை இந்தச் சட்டமன்றத்திலே என்றைக்காவது ஒரு நாள் உரத்த குரலிலே பேசி யாரையும் புண்படுத்தினார் என்ற நிலை என்றைக்குமே இல்லை என்ற அளவிற்கு, அவர் தொடர்ந்து 25 ஆண்டுக் காலத்திற்கு மேலாக இந்த அவையிலே பணி யாற்றினாலும்கூட அவரோடு இணைந்து பணியாற்றுகின்ற அந்த வாய்ப்பைப் பெற்றுள்ள நாங்கள் எல்லாம்கூட, அத்தகைய ஒரு சூழ்நிலை என்றைக்கும் உருவானதைக் கண்டதில்லை. அந்த அளவிற்கு உங்களுடைய உள்ளம் எல்லாம் கவர்ந்த ஒரு பெரியவர் மறைந்த ஆண்டி அம்பலம் அவர்கள் ஆவார்கள்.

அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அதற்குச் செய்ய வேண்டிய உதவிகளைப் பற்றியும் இங்கே எடுத்துக்கூறப் பட்டது. நான் மாண்புமிகு உறுப்பினர்களை எல்லாம் கேட்டுக் கொள்வேன். இதுபோன்ற ஒரு பெரிய துக்க சம்பவம் நடைபெற்று, அந்தத் தலைவருக்காக இரங்கல் தீர்மானம் நிறை வேற்றுகிற நேரத்தில், அவரைப் பற்றிய குறிப்புகள்தான் அவைக் குறிப்பிலும், ஏடுகளிலும், ஏறவேண்டுமேயல்லாமல்.