உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

631

பிறந்தவர் என்றாலும்கூட, இந்தப் பெரிய நாட்டின் தலைவர் களிலே ஒருவராகத் திகழ்ந்தவர். சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர் தொழிலிலே ஈடுபட்டு இருந்த சி.எஸ். அவர்கள், அண்ணல் காந்தியடிகளுடைய ஒத்துழையாமை இயக்கத்திலே கவரப்பட்டு வழக்கறிஞர் பதவியைப் பொருட்படுத்தாமல் தேசிய இயக்கத்திலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு விடுதலை ஆர்வத்தோடு பல போராட்டங்களில் ஈடுபட்டு தியாகத் தழும்புகளைப் பெற்றவர் மறைந்த சி.எஸ். அவர்கள் ஆவார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1952 ஆம் ஆண்டில் மூதறிஞர் இராஜாஜி அவர்களுடைய தலைமையிலே அமைந்த அமைச்சரவையிலும், பின்னர் 1954ஆம் ஆண்டில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய தலைமையிலே அமைந்த அமைச்சரவையிலும் நிதியமைச்சராக விளங்கி பெரும் புகழ் பெற்றவர். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி பெற்று, அப்பொழுதும் பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய தலைமையிலே இந்த அவையிலே அவர்கள் நிதியமைச்சராக வீற்றிருந்தார்கள். அப்பொழுதுதான் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல நிதிநிலை அறிக்கையை அவர்கள் இங்கே முன்வைத்து, இன்னும் ஒரு 3, 4 கோடி ரூபாய் சேர்ந்திருந்தால் சென்சுரி அடித்திருப்பேன், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டைக் கொடுத்திருப்பேன் என்று அன்றைக்கு அவர்கள் சொன்னார்கள். 1957 ஆம் ஆண்டு அவர்கள் இந்த அவையிலே அமைச்சராக, நிதியமைச்சராக இருந்தபோது, நானும், பேராசிரியரும் இந்த அவையிலே உறுப்பினர்களாக இருந்தோம் அன்றுதொட்டு அவரை நாங்கள் மிக நன்கு அறிவோம்.

1962-ல் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலிலே அவர்கள் பெருவெற்றி பெற்று, எஃகு மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, பல பெரிய இரும்பு எஃகுத் தொழில்கள் இந்தியாவில் உருவாவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கினார்கள். பண்டித நேரு அவர்களுடைய மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப் பேற்று, இங்கே நண்பர்களெல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல, வேளாண் துறை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்