640
8948115 TAN
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
முதலமைச்சரிடத்திலே தர வேண்டுமென்று சொன்னால், அரசியல் காரணமாக பலருக்கு ஒரு தயக்கம் ஏற்படும் என்பதற்காகத்தான், அரசு பொது என்கின்ற வகையில் பொதுத் துறைச் செயலாளருக்கு, அவருடைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். எனவே இதில் அரசியல் கட்சி வித்தியாசங்கள் பாராமல் அனைவரும் தங்களுடைய நிதியை வழங்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
க
அமைச்சர்கள் தங்களுடைய ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதைப்போலவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சார்பாகவும், வழங்க வேண்டுமென்று மற்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பாக நண்பர் சூரியமூர்த்தி அவர்கள் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்களுடைய அரசு அலுவலர்கள் அத்தனை பேருடைய ஒருநாள் ஊதியத்தை இந்த நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்து இருக்கிறார்கள். அதைப் பிடித்தமே செய்து கொள்ளுங்கள். ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொண்டு எங்களுக்கு ஊதியம் அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். அதற்காக நன்றி பாராட்டி, மற்றவர்களும் இதற்குத் தங்களுடைய ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த ஆறுதலை மிகுந்த உருக்கத்தோடு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக இந்த அவையிலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
வணக்கம்.
600 235
006
41