உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

67

வெளிப்படையாக குற்றம்சாட்டிக் கொண்டனர் இங்கேயும் அது நடந்திருக்கிறது. "எந்த ஜனநாயக நாடாக இருந்தாலும், இந்த நிலமை அரசாங்கத்தையே தூக்கி எறிந்து சின்னாபின்னப் படுத்தியிருக்கும். இங்கே அனைத்துமே வழக்கப்படி நீடித்தன. ஆகவே, இந்த அரசாங்கமும் நீடித்தது" என்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நாங்கள் சொல்லுகிறோம் என்பதா அல்ல - நேரு சொல்லி யிருக்கிறார் என்பதற்காக தயவுசெய்து ராஜினாமா செய்து விடுங்கள்.

இறுதியாக, இந்த அரசு, சொந்தக் கட்சி நலத்திற்காக நடைபெறுகிறது; கட்சிக்கும் சர்க்காருக்கும் வேறுபாடு தெரியவில்லை; அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது; உற்றார், உறவினர், நண்பர் இவர்களுக்குச் சலுகைகள் வழங்குகிறது; மர்மம் நிறைந்த சில லாபங்களுக்காகத் தனியார் துறையை வளர்த்துப் பொதுத்துறையை சவலைப் பிள்ளையாக்கி வைத்திருக்கிறது; ஆளும் கட்சியினர், லஞ்சம் போன்ற ஊழல்களுக்குத் தக்க நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ரகசியப் பாதுகாப்பும் அளித்து வருகிறது; உணவு விஷயத்தில் நிலையான கொள்கை இல்லாத காரணத்தினாலும், எதிர்க் கட்சிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தி னாலும், ஒரு சர்வகட்சிக் குழுவின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன் வராததாலும் உணவுப்பஞ்சத்தை உருவாக்கி விட்டிருக்கின்றது; தமிழை ஆட்சி மொழியாக்கவும், பயிற்சி மொழியாக்கவும், அளித்த உறுதிமொழிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டது; ஆகவே, எனக்கு இந்த மந்திரி சபை மீது, தெளிவாகச் சொல்லுகிறேன், நிறைந்த நம்பிக்கை இருக்கிறது, நீங்களாக ராஜினாமா செய்து விடுவீர்கள் என்று கூறி முடித்துக் கொள்கிறேன்.