6
திருக்குவளையில் என் அன்னையின்
பெயரால் “அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி'யை முதலமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம்தான் திறந்துவைத்தார். என் அன்னை அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எனக்கு முன்பு சென்று என் இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர் அன்றைய முதல்வர் திரு. காமராஜர்!
காமராஜருக்கும் எனக்குமிடையே எவ்வளவோ கடுமையான அரசியல் போராட்டம் - ஆனால் அவர் மறைந்த பிறகு சென்னையில் காமராஜர் சாலை சென்னையிலும், விருதுநகரிலும் காமராஜர் நினைவகம் - கன்னியாகுமரியில் வரலாற்றுச் சின்னமாக காமராஜர் மணி மண்டபம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் - அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட சட்டம் - இத்தனையும் அரசியல் பண்பாட்டின் அடையாளமாக
நான் உருவாக்கியது - அதுபோல அவர் நினைவு
போற்ற எத்தனையோ ஏற்பாடுகள்.
மனித நேயத்துடன் அரசியல்
நடத்தப்பட்டது - அராஜகங்களுக்கிடையி
லேயும் அன்பு மலர் பூத்தது.
இப்படி பல வடிவெடுத்த
சூழ்நிலைகள்
சமுதாய மாற்றங்கள்