கலைஞரின் சட்டமன்ற உரைகள்
89
இந்தக் கருத்து இடம் பெறுமா? முதலமைச்சர் அவர்கள் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். ஆனால் இது சட்டத்திலே இடம் பெறாது என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகவேதான் இந்த மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லையென்று சொல்லுகிறோம் நாங்கள்.
சொல்ல
இதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் விரும்புகிறேன். டில்லிக்குச் சென்ற முதலமைச்சர் அவர்கள், மத்திய சர்வீஸ் கமிஷன் தேர்வில் இந்தி கட்டாயத் தேர்வை ஒப்புக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பது? சென்ற ஆண்டு போராட்டம் ஏற்பட்ட நேரத்தில், ரத்தச் சகதியில் தமிழக மக்கள் வீசி ஏறியப்பட்ட நேரத்தில், 'இந்தியும் ஆங்கிலமும் நிரந்தரமாக ஆட்சி மொழியாக இருப்பதை விரும்புகிறேன். இந்தக் கருத்தை, கல்கத்தாவில் பேசிய திரு. சி.எஸ். அவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று மகிழ்ச்சிப் புன்னகையோடு தெரிவித்தார். ஆனால் இப்போதோ மத்திய சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஏற்றுக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள். எப்படி இவர்களை நம்ப முடியும்?
((
'விலைவாசி உயர்வைப் கட்டுப்படுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம் என்று நாங்கள் அல்ல, இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்த நிலையை அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. காமராஜர் அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். "மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் விளைவாகத் தேசீய வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கிறது; ஆனால் அபிவிருத்தித் திட்டங்களின் பலன்கள் சாதாரண ஏழை மக்களுக்குக் கிடைக்கவில்லை” என்று திரு. காமராஜர் பேசியிருக்கிறார்.
இந்தப் பலன்கள் சாதாரண ஏழை மக்களுக்குக் கிடைக்காத காரணத்தால்தான் ஜூலை மாதம் 29-ம் தேதி இந்த உலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. உலகம் என்று நான் சொல்லக் காரணம், இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. காமராஜர் அவர்கள் ரஷ்யாவில் சுற்றுப் பயணம்