பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. பிள்ளைப் பெருவிண்ணப்பம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,-பசியில்ை இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியருது அயர்ந்தவெற்றரைக் கண்டுள்ளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்ருேர்என் நேருறக் கண்டுள்ளம் துடித்தேன் ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சம் இளேத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் நலிதரு சிறிய தெய்வமென்றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே புந்தி நொந்துள்ளம் நடுக்கமுற்றேன் கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் | துண்ணெனக் கொடியோர் பிறவுயிர்க் கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் கண்ணினுல் ஐயோ பிறவுயிர் பதைக்கக் கண்டகாலத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலுங்கண்ணி வகைகளுங் கண்ட போதெல்லாம் எண்ணி எண்ணுள்ளம்;நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுள்ளம் அறியும் | காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் நாட்டிய வுயர்ந்த திண்ணை மேலிருந்து நன்குறக் களித்துக் கால் கீழே நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய் |