பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q58 அருணகிரிநாதர் 66, 100 பாக்க) இந்நூல் வேண்டிய வரமெலாம் தரவல்ல தாய்ப் பாராயணத்துக்கு மிகச் சிறந்ததாய்ப் பயன் தரு நூலாகும்; ஆயினும் பொருள் விளங்குவது கடினமா யிருப் பதால் எளிதாகப் பொருள் விளங்கும் கீழ்க்குறித்த பதினறு

பாடல்களையாவது பாராயணஞ் செய்தல் உத்தமமாம்.

1. திருவாவினன் குடி 30. தெய்வமணம் 48. சேயவன் 12. செப்புங்கவச 34. திரிகையிலாய் 63. தியங்காப் 15. திவாகர கன்ன 41. தெண்டன் 73. திசாமுக 18. தினைவேத்தி 44. சேதாம்பல 75. செய்தவத் 29. திகழுமலங்கல் 47. திடம்படு 94. சேதிக்க 3. கந்தரலங்காரம் ‘'வேலர்-அலங்காரத் துட்பொருளை யாய்வதுவே தேகங் கலங்கா அலங்காரம்’ -தணிகையுலா. இது மிக இனிமையான ஒரு நூல். முருகன் திருவடி ாயில் திடபக்தியை ஊட்ட வல்லது. பத்தி ரசம் நிரம்பியது. செந்தமிழ்ச் சுவை ததும்புவது. முருகன் அடியார்கள் உள் ளங் குளிரவும் உரோமஞ் சிலிர்க்கவும் ஒதி மகிழ்வது, ஒப் புயர்வற்றது. சிவபிரானுக்குத் திருவாசகம் எங்கனம் ருசிக் குமோ அங்ங்ணம் முருகபிரானுக்குக் கந்தரலங்காரம் ருசிக் கும் என்க. அலங்காரம் நூறு பாடல்களுள்-தாம் பெற்ற பேற்றைக் கூறித் தமது ஆனந்தத்தைத் தெரிவிக்கும் பாடல் களின் இடையிடையே தமது குறைகளைக் கூறி அருள் வேண்டும் பதிகங்களும் செறிந்துள ஆதலின் இந்நூல் ஒரே சமயத்திற் பாடப் பட்டதல்ல என்றும், அப்போதைக் கப்போது சுவாமிகளது மனமும் தவமும் நின்ற வழியே சந் தர்ப்பத்துக்குத் தக்கபடித் தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் {பக்கம் 57 பார்க்க) பின்னர்ச் சுவாமிகளாலேயோ அல்லது அவர்தம் சீடர்களாலேயோ தொகுக்கப்பட்டுக் கந்தரலங் காரம் எனப் பெயர் வைக்கப்பட்டுச் சலங்காணும் என்னும் நூற்பயனும் கூ ற ப் ப ட் டி ரு க் க 5. வேந்தர்