பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 191 அடி 6. அருணை நகரில் ஒரு பக்தன் எனத் தம்மையே படர்க்கையிடத்துக் குறித்துத் தாம் பாடிய திருப்புகழை முருக வேள் மதாணியாகப் (பதக்கமாகத்) திருமார்பிற் புனைந்து கிருபாகர மூர்த்தியாய் வி ள ங் கு கி ன் ரு ர்-என்கின்ருர். படர்க்கையிடத்தில் தம்மைக் கூறினதால் இவ்வகுப்பு அருண கிரியார் கிளியான பின்பு பாடினர் என்னுங் கொள்கையை வலியுறுத்தும்; அடி 12-13. விசேட அறிவையும், வித்தைகளையும் இறைவனிடத்தில் தாம் பெற்ற தலங்களாகத் திருவருணை, திருவிடைக்கழி, திருச்செங்கோடு, திருத்தணி, அமராவதி கூறப்படுகின்றன. வயலூர் ஏன் விடப்பட்டிருக்கின்றது என் பது விளங்கவில்லை. திருப்புகழ் நித்தம் பாடும் பணி ஒன்றே அங்கு கிடைத்த காரணத்தாலும் திருப்புகழில் வயலூரை வைத்துப் பாடுக என்ற தலுைம் பிற நூல்களில் வயலூரைக் குறிக்க இல்லை போலும். (பக்கம் 178). அடி 19, (i) முருகவேள் தம்மை வழியடிமையாக ஆட் கொண்டு அருளிய அருட் ப்ரசாதத்தை இங்கு குறிக் கின்ருர். (ii) இனிது கவி யப்படி ப்ரசாதித்த பாவலன்-இதில் வரும் அப்படி என்ற சொற் ப்ரயோகம் கவனிக்கத்தக் கது. பூத வேதாள வகுப்பு 15-ஆம் அடியில் அப்படி பத்தி பழுத்த மனத்தினர் என்றும், திருஞான வேழ வகுப்பு 5-ஆம் அடியில் கடகம் அப்படி சாயமோதுவ' என் றும், திருப்புகழ் 866-ஆம் பாட்டில் ஒருபொருள் அப்பர்க் கப்படி ஒப்பித்தர்ச்சனை கொண்ட நாதா” என்றும் வருவன நோக்கின், அப்படி என்னும் சொல் அந்நிலையில், அந்த அற்புத வகையில்', 'ஆச்சரியப் படத்தக்க வகையில்', 'அந்த கூடிணத்தில் என்று பொருள் படும்படி உபயோகப்படுத்தப் பட்டுளது என விளங்கும். பூநீ சம்பந்தர் தேவாரத்தில் ஒப் புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்த வனே திருவாவடு துறை III-4-7) என வரும் இடத்தும்