பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 அருணகிரிநாதர் சேதியை விளக்கினர். பின்னர்த் (82) தீர்த்த கிரியைத் (399) தரிசித்துப் 'பாட்டி லுருகிலை கேட்டும் உருகிலை” என் னும் அருமைப் பதிகத்தைப் பாடி, (83) கனக மலையை யும் (400) தரிசித்துப் பாடிக், 184) கொங்கண கிரிக்கு 1898) வந்தார். கொங்கண கிரிப் பதிகம் ஐங்கரனை ஒத்த மனம்" என்பது பலவித வேண்டுகோள்கள் அமையப் பெற்றது. இதில் மனத்தை ஐங்கரனுக்கு (விநாயக மூர்த்திக்கு) ஒப் பிட்டது ஒர் அருமையான உவமை. எங்ங்னம் இருந்த இடத்தில் (தந்தையைச் சுற்றியே) சகல லோகங்களையும் ஒரு நொடியில் விநாயக மூர்த்தி வலம் வந்தாரோ அங் ங்ணம் மனமும் இருந்த இடத்தில் உலகெங்கும் சுற்ற வல்லது என்பது விளக்கப் பட்டது. மனே வேகத்தை உளம் 'ஆயிரக்கோடி சுற்று ஒடும்' என்னுங் கந்தரந் தாதியிற் (34) காணலாகும். இப்பதிகத்திற் கேட்ட வேண்டு கோள்களுள் ஒன்று கொங்குப் ப்ரதேசத்தில் தென் கரை நாட்டைச் சார்ந்த திருப்புக் கொளியூர்அவிநாசியில் அப்பரது1 (சிவபெருமான்) திருவருளால் பூநீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் முதலை வாயினின்றும் பிள்ளையை வரவழைத்த ரகசியப் பொருளை (முதலைவாய்ப் பட்ட பிள்ளை உயிர் பெறவும்-உடல் கொள்ளவும்வளரவும் வைத்த பொருளை) எனக்கு அருள்வாயே [:கொங்கில் உயிர்பெற்று வளர்த் தென் கரையில் அப்பரருள் கொண்டு உடலுற்ற பொரு ளருள்வாயே”) என்பது. கொங்கன கிரியினின்றும் புறப்பட்டுச் (85) சேலம் (938) தரிசித்து, (86) ராஜபுரத்துக்கு (ராசிபுரம்)-1939) வந்து தரிசித்து அத்தலத்துப் பதிகத்தில் மூவெழு வள் ளல்களைப் பற்றிக்கூறி, ராஜபுரம் கொங்கு நாட்டைச் சார்ந்த தென்றும், கொங்கு நாடு கொங்கணுதி தரப்பெறு கொங்கு (நாடு) எனவும் 1939) விளக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து 87) திருச்செங்கோட்டுக்கு (367-387) வந்து சேர்ந்தார். h 1. அப்பர்-சிவபெருமான்-சிராமலை அப்பர்-337, 338, 906 பதிகங்களைப் பார்க்க.