பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 75。 னக் கூறுகின்றது. பின்பு (109) விஜய மங்கலத்துக்கு 1910| வந்து அத்தலத்துப் பதிகத்தில் வயலூரையும், வேட்ர் மேல் முருகர் வேல் ஏவியதையும் (பக்கம் 42-தலம் 46 ஐ. பார்க்கவும்). விஜய மங்கலத்துள்ள தாமரைத் தடாகத்தை யும் விவரித்துப் பாடல் பாடினர். அதன்பின் (110) திருமுரு. கன் பூண்டியைத் (946) தரிசித்து ஆண்டுக்கு ஒருநாளே ஆறும் தபஜெபத்தை நான் மனக்கனிவுடன் தீண்டவும், உன் திருவடியைப் போற்றவும் அருளுதியெனத் துதித்தனர். இங் நனம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஆண்டவனைத் தரிசித் துப்பாடித் துதிக்கும் அநுட்டானம் இப்போது திருத்தணி கைக்கு1 அன்பர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி முதல் நாள் தரிசனத்தின் பொருட்டு டிசம்பர் இறுதிநாள் இரவு வந்து கூடி முருகன் திருப்புகழைப் பாடித் துதிப்பதற்குப் பொருந்தி யிருக்கின்றது. திருமுருகன் பூண்டியிலிருந்து (111) அவிநாசிக்குப் (946-949) போய்ப் பணிந்து அது கொங்குநாட்டில் உள்ள தெனத் (948) தெரிவித்து, (112) திருப்புக் கொளியூரையும் 1950-952) பரவிச் சுந்தரமூர்த்தி சுவாமிகளது ஞாபகம் மிகவும் வர அவரது சரித்திரத்தைச் சுருக்கமாகக் கூறி, அவ ருக்கு இறைவன் பொதி சோறளித்ததையும், திசைகாட்டி உதவியதையும் பாராட்டி, முதலையுண்ட பாலனை அவர் அழைத்த திருவிளையாடலைச் சிறப்பித்துப் புகழ்ந்து, மதப் பட்ட என்னும் 951-ஆம் பாடலைப் பாடி மகிழ்ந்தார். "துற். குணம் வேருக*ஞான உபதேசம் பேசு சற்குருநாதா! உன் அற்புத சீர்பாதம் மறவேனே' (950) என நன்றியும் பாராட்டினர். முதலையுண்ட பாலன்ை பூரீ சுந்தரர் அழைத்துப் புக் கொளியூர் என்னும் தலத்தில் உலகர்முன் காட்டின படியாற் 1. இவ் வழக்கம் சில வருவடி காலமாக நடைபெறுகிறது. 1912-ம் வருட 蠶 எங்களால் அனுஷ்டிக்கப் பட்டு 1921 முதல் வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமி சச்சிதர " அவர்களால் பிரபலமாக்கப்பட்ட வழக்கம் அil.