பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147/கவியரசர் பாரதிதாசன்



காலியின் கைப்பிடியில் என்னை உட்கார்த்தி வைத்துக் கொண்டார். இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். சொன்னேன். அனைவரையும் உள்ளே அழைத்து உட்காரச் சொன்னர். பிறகு என்னிடம் 'ஆமாம், கி. ஆ. பெ. விசுவநாதத்தை உனக்கு முதலில் தெரியுமா? அல்லது என்னை முதலில் தெரியுமா?’ என்று கேட்டார். ஏன்? உங்களைத்தான் முதலில் தெரியும்' என்றேன். "அப்போ, அவர் விலகிக் கொண்டால் நீயும் அவரைப் பின்பற்றி ஏன் விலகிக் கொண்டாய்? ஒரு வேளை உனக்கு நெல் அனுப்ப மாட்டாரா?" என்றார், "உள்ளுர்க்காரர், பெரிய மனிதர். ஒருவேளை எனக்கு அனுப்பும் படியை நிறுத்தி விடவும் கூடும்" என்று பதில் சொன்னேன். இதற்கு மேல் பேச அவரிடம் பேச ஒன்றுமில்லை. சற்றுப் பொறுத்து "நான் இப்பொழுது பேசலாமா?" என்று கேட்டேன். "பேசு" என்றார்.

"யாரை முதலில் தெரியுமென்றல்லவா கேட்டீர்கள். உங்களையும் எனக்கு முதலில் தெரியாது. உங்கள் கவிதைகளைத்தான் முதலில் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட காரணத்தால் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன். ஆகையால் எனக்கு யாரும் படியளக்க வேண்டியதில்லை. உங்கள் தயவும் எனக்கு வேண்டியதில்லை. விசுவநாதம் எழுதிய கடிதங்களுக்கு நீங்கள் ஒரு விடையும் தராமல் வாளாவிருந்து விட்டீர்கள். மனம் நொந்த அவர், குழுவிலிருந்து விலக முடிவு செய்தது மிகவும் சரியென்றும், விழாக் குழுவையே நீங்கள் அவமதித்து விட்டீர்கள் என்றும் எனக்குப்பட்டது. எனவே நாங்கள் அனைவரும் இதிலிருந்து விலகிக் கொள்வது என்று முடிவு செய்தோம். ஆயினும் உங்கள் கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைக் காட்டிலும் உங்கள் கவிதைகளே எனக்கு அதிகம் மதிப்புடையவை" என்று வேகமாகப் பேசினேன். -

சாய்வு நாற்காலியிலிருந்து கவிஞர் துள்ளியெழுந்தார்.