பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47/உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம்



கூறிய விளக்கம், 'கவிதையில் குற்றியலுகரப் பிழை ஏற்படாமல் எப்படி எழுதுவது?' என்பது பற்றியாகும். தாம் ஒருவருக்குச் சொல்லும் விளக்கத்தை-கவிதைக் கலை நுணுக்கத்தை-அத்துறையில் வளரத்துடிக்கும் மற்றொருவரும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற கவிஞரின் பரந்த எண்ணத்தை இன்றைக்கு நினைத்தாலும் இதயம் சிலிர்க்கிறது.

தமக்குத் தெரிந்த தொழில் நுணுக்கத்தை இன்னொருவன் தெரிந்து கொள்ளக்கூடாது என்று திரைபோட்டு, உலகின் பொது நலத்திற்குக் கேடு செய்யத் துடிக்கும் கூட்டத்தினரின் நடுவில், கடற்கரையில் அண்ணாந்து நிற்கும் கலங்கரைவிளக்கமாகப் பாவேந்தர் காட்சியளிக்கிறாா்.

சீனப்போரும்

சைவ உணவும்

சீனப்போரில் இந்தியா தோல்விகளைத் தழுவிக்கொண்டிருந்த நேரம். இந்திய வீரர்கட்கு உணர்ச்சியூட்டும் கவிதைகளை ஏராளமாகக் கவிஞர் படைத்துக் கொண்டிருந்த வேளை. வெளியூரிலிருந்து வந்திருந்த சில இளங்கவிஞர்களும், சுவைஞர்களும் புரட்சிக் கவிஞருடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர். நண்பகல் சாப்பாட்டுவேளை நெருங்கவே கவிஞர் தமது வழக்கப்படி (அதாவது வீட்டில் எத்தனை பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறியாமல் வந்திருக்கும் விருந்தினருக்கெல்லாம் இலைவிரிக்கச் சொல்லிவிடுவார்) நீங்கள் எல்லாரும் இன்று மதியம் இங்கேதான் சாப்பிட வேண்டும். நல்ல வஞ்சிர மீன் வருவல், இறால்பிட்டு மணமாகத்தயார் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். அவ்வாறு கூறிக்கொண்டிருந்தவர், எதிரில் முகத்தைச் சுளித்து ஒருமாதிரியாக உட்கார்ந்திருந்த இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியுடம்பு இளைஞரைப் பார்த்து "ஏம்ப்பா... இதெல்லாம் நீ சாப்பிடுவேல்ல? என்று அன்போடு கேட்டார்.