உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 சென்னையிலே, கோகுல் வீட்டு மெத்தையிலே குமார் தூங்கிக் கொண்டிருக்கிறான். கனவு! குழந்தையின் கனவு எதுவாக இருக்கும் ? எந்த அப்பாவியை அடித்து, யாரை மோசம் செய்து, இலட்சாதிபதியாகலாம் என்று கனவு காணப் போகிறதா? அல்லது பதவி தேடுவதற்காக எப்படியெப்படிக் கொள்கைகளைக் காற்றிலே புறக்கவிடலாம். யார் யாரைக் காக்கா' பிடிக்கலாம் என்று கனவு காணப் போகிறதா? குழந்தையின் கனவுகள் முள்ளிலே இருக்கும் ரோஜாவைப் பறிப்பது போலிருக்குமே தவிர, தேனீக்களை அழித்து விட்டுத் தேனடையை எடுத் துக் கசக்கிப் பிழிவதைப் போலிருக்காது! அதுவும் தாயை இழந்த ஒரு குழந்தையின் கனவு எப்படி யிருக்கும் ? மிகமிக மென்மையான கனவு! ரோஜாவைப் பறிப்பது போலக்கூட இல்லாமல், ரோஜா மலரே குழந்தையின் கன்னத் தில் வந்து விழுந்துவிடுவது போன்ற கனவு ! ஆம். குமாரின் தாயார் அவனைத் தூக்கி முத்த மிட்டு மார்போடணைத்துக் கொஞ்சுகிறாள். 'ஆராரோ' பாடுகிறள்..அவனோ தூங்க மறுக் கிறான். காலை நேரம். தலைவாரி, உடையலங் காரம் செய்து அவனைப் பள்ளிக்கூடம் அனுப்பு கிருள். அவன் போகும்போது பின்னழகைப் பார்த்தபடி வாயிற்படியிலேயே நிற்கிறாள். பள்ளியிலிருந்து வருகிறான் .... திரும்பி எதிர் கொண்டழைத்து உச்சி மோந்து முத்தமிட்டு விளை பட அழைத்துச் செல் கிறாள். குமார் விழித்துக்கொள் கிறன். ‘கனவுத் தாயா ரைக் காணவில்லை ! அந்தப் படத்தை எடுத்து மார் யோடு அணைத்துக்கொள் கிருன். கண்ணீர் ! பசுந் தரையிவேயிருந்து ஊற் றெடுத்துக் கிளம்பிவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/14&oldid=1699635" இலிருந்து மீள்விக்கப்பட்டது