உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 படத்தைப் பார்த்தபடி அணைத்தபடி - படுக் அருவி ! கையில் சாய்கிறான். "மறுபடியும் அம்மா கனவிலே வரமாட் டாளா” என்ற ஆசையோடு கண்ணை மூடிக்கொள்கிறான். தூங்கி விடுகிறான். விடிந்துவிடுகிறது. வேலைக்காரனும், வேலைக்காரி யும் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டார்கள். பிள்ளை, அம்மாவை நினைத்து நினைத்து ஏங்கிவிடும் போலிருக்கிறதேயென்று, தூங்கும் அரும்பின் கையிலேயிருந்த அம்மா படத்தை மெதுவாக எடுத்து ஒளித்து விட்டார்கள். குமார் எழுந்தான். 'கையிலேயிருந்த அம்மா எங்கே ? விழித்தான் ! யார் தூக்கிக்கொண்டு போயிருப்பார்கள்? ஒரு வேளை கனவு உலகத்தில் போட்டுவிட்டு வந்துவிட்டோமா?' இப்படி நினைத்தான் ! பரவாயில்லை இன்றிரவு, லோகத்துக்குப் போகும்போது எடுத்துக்கொள்ளலாம்!'- இப்படி ஆறுதல் அந்தக் குழந்தைக்கு ! கனவு அம்மனூரில் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.கோகு லுக்கு ! கோமதியும், தந்தையின் பிரிவைக் கோகுலின் உறவால் ஒருவாறு ஆற்றிக்கொண்டாள். எதையோ எண்ணி ஏங்கியவாறு, கடையிலே அமர்ந்து வியாபாரத்தைக் கவனிக்கும் கோமதியின் முகத்திலே, அவன் கற்பனை செய்ய முடியாத அழகையும், அந்த அழகிலே மறைந்து கிடக்கும் அமைதியையும், அந்த அமைதி யோடு குழைந்து நிற்கும் அன்பையும் அவன் ரசித்துக்கொண்டே இருந்தான். கடைக்குத் தின்பண்டங்கள் வாங்க வருகிற குழந்தை களுக்கு அவள் காட்டுகிற அன்பை அவன் உன்னிப்பாகக் கவனித் தான். வறண்ட தலையோடு வரும் குழந்தைகளுக்கு எண்ணெய் தடவிச் சீவி விடுவாள்; நன்றாகப் படிக்க வேண்டும் என்று உபதேசம் செய்து அனுப்புவாள். இவையெல்லாம் கோமதியின்பால் கோகுலுக்குப் புதிய ஈடுபாட்டை வளர்த்தன. அத்தோடு, கோமதி தனியாக இருந்தால், அந்த ஊரிலே திரிகிற 'ரௌடிக்' கும்பல் அவளைச் சும்மா விடாது என்பதையும் புரிந்துகொண் டான். வாலிபன் ! அதனால் காதல் பொங்குகிறது ! தகப்பன் ! அதனால் குழந்தை குமார் எதிரே நிற்கிறான் ! நல்ல மனிதன் ! அதனால் ஓர் அபலையைக் காப்பாற்ற வேண்டு மென்ற கடமையுணர்ச்சி எழுகிறது ! கடைசியில் கடமை உணர்ச்சியின் பெயரால் காதல் வென்று விடுகிறது ! அவனுக்கு ஒரே நம்பிக்கை, குமாரின் தராசு சாய்ந்து விடாது என்பதுதான் ! காதலின் வெற்றிக்கு அந்த நம்பிக்கையும் ஒரு காரணமே ! கடைக்கு வரும் குழந்தையிடம் கோமதி காட் டிய பாசம், குமாரைப் பற்றிய பயத் திரையைக் கோகுலிட மிருந்து விலக்கிவிட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/16&oldid=1699638" இலிருந்து மீள்விக்கப்பட்டது