உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 டிருக்கிறாள். அப்போது எதிரே ஒரு டாக்டர் வந்து நிற்கிறார். "யார் சார் உங்களைக் கூப்பிட்டு வந்தது ?” என்று வியப் போடு கேட்கிறான் கோகுல். "இதோ இவன்தான்!" என்று குமாரைக் காட்டுகிறார் டாக்டர். உடனே கோகுல் மகனை அள்ளி எடுத்து அணைத்து முத்தமாரி பொழிகிறான். ஆனால் குமார் எதிர்பார்த்தபடி அவன் அம்மாவிடமிருந்து ஒரு முத்தத் துளிகூடக் கிடைக்கவில்லை ! காரணம் என்ன? குமார் யோசித்தான் இளம் நெஞ்சம் இது போன்ற பெரிய யோசனையில் ஈடுபடலாமா ? "எனக்கு நிஜ அம்மா இல்லே ! இது போலி அம்மா — பொம்மை அம்மா !" இப்படி ஒரு முடிவுதான் அவன் மனத்தில் உதயமாகியிருக்க வேண்டும் ! புத்தகங்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போய்விட்டான். வேலைக்காரி அவனை வழி அனுப்பி வைத்தாள். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், மருந்து கொடுத்துவிட்டு, "கொஞ்சம் ஆபத்தான நோய்தான்; பனிக்காற்றுப் படாமல் கவனித்துக் கொள்ளுங்கள்; பார்ப்போம் பிறகு !'" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். கோமதியின் துயரம் பன்மடங்காயிற்று! 'இதுவரையில் சரியாகக் கவனிக்காததால் இப்படியாகிவிட்டது என் குழந்தை!" என்று கணவனிடம் சீறினாள். அவன் குழம்பியிருந்தான். தாழை மடலை மேலேயிருந்து தடவினால் முள் குத்தாது எதிர்ப்புற மிருந்து தடவினால் முள் குத்திக் கை ரணமாகிவிடும் ! கோகுல், கோமதியிடம் எதிர்நீச்சல் போட்டு, இருதயத்தை இன்னும் ரண மாக்கிக் கொள்ள விரும்பவில்லை! ஒருசாதாரணப் பெண்ணுக்குரிய மனக்குமுறல் அது. அதைத் தனது அமைதியினாலேயே அடக்கி விட முடியுமென நம்பியிருந்தான் அவன். பள்ளிக்கூடம் முடிந்து குமார் வீடு திரும்பினான். கொஞ்ச நாட்களாக வேலைக்காரிதான் அவனை எதிர் வந்து அழைத்துப் போகிறாள். இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் படுக்கைக்குப் போயினர். கோமதியும் குழந்தையும் ஒரு படுக்கையில் ! கோகுல் நாற்காலியில் படுத்தப்படித் தூங்கினான். தூங்காமல் புரண்டுகொண் டிருந்த குமார், மெதுவாக எழுந்தான். அறையின் மூலைகளை யெல்லாம் தேடினான். என்ன தேடுகிறான், இந்த இருட்டில்? அறையில் அவன் தேடியது கிடைக்கவில்லை. வீட்டின் கீழ்ப்பக்கம் போனான் மெதுவாக ! அங்கும் தேடினான். உயரமான பீரோ ; அதன்மீது ஒரு நாற்காலியைப் போட்டு ஏறினான். ஆ ! அதோ அவன் தேடியது கிடைத்துவிட்டது! அவனது அம்மா படம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/22&oldid=1699649" இலிருந்து மீள்விக்கப்பட்டது