உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 அவளையறியாமல், கணவன் மீது அவளுக்குள்ள அன்பு புதுப் பிக்கப்பட்டது ! அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகேயுள்ள மரத்திலே யிருந்து தழைகள் உதிர்ந்தன. அவற்றைக் கண்டு அலறினாள். அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த இரு புறாக்களில் ஒரு புறா எழுந்து பறந்தது !-அதைப் பார்த்து ஓவெனச் சப்தமிட்டாள் ! அந்த நேரத்திலே,தன்னை அடித்ததற்குக் காரணம் கேட்க அப்பா வின் ஆபீசுக்குப் போய், அங்கே பியூன் உதவியோடு ஆஸ்பத்திரிக்கு வந்த குமார், அம்மா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அவ ளிடம் ஓடிவந்தான். " 'குமார் ! அப்பா ஏமாற்றிவிடுவார் போலிருக்கடா !' என்று. அவனை அணைத்துக்கொண்டு வீரிட்டுக் கதறினாள் கோமதி ! "அழாதேம்மா !” என்று அவள் கண்களைத் தன் கொழுந்துக் கைகளால் துடைத்தான் அந்த அரும்பு! என்று "யாரடா ராஜா இனிமேல் நமக்கு ஆதரவு? விம்மினாள். அவள் மனக்கண் முன்னே, அம்மனூர் குடிசையில்' கோகுலின் காலைப் பிடித்துக்கொண்டு ஆதரவு கோரிய அந்தக் காட்சி தோன்றி மறைந்தது. "பயப்படாதேம்மா !.. நான் பெரியவனா ஆகி, உன்னைக் காப்பாத்துவேன்-பயப்படாதேம்மா !” என்று அவளது மோவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு குமார் தேம்பி அழுதான். அந்தப் பசலையின் ஆதரவு மொழி, அவள் குறுகிப்போன இருதயத்தை விசாலமாக்கிவிட்டது ! தாய்மை உணர்ச்சி, பிள்ளை யைப் பெற்றால்தான் வரவேண்டுமா ? அல்லது தன் வயிற்றில்" பிறந்த பிள்ளையிடம்தான் காட்டப்பட வேண்டுமா ? தாய்மை உணர்ச்சி, பெண் குலத்தின் சொத்தாயிற்றே ! அந்த உணர்ச்சி' கோமதியின் உள்ளத்திலேயிருந்து பீரிட்டுக் கிளம்பிக் குமாரைத் தழுவிக்கொண்டது ! இருவரும் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டனர்.அம்மா வின் படத்திலேயுள்ள கண்ணாடித் துண்டுகள் கிழித்த கீறலின் தழும்புகளைக் கோமதியின் கண்ணீர் கழுவிக்கொண்டிருந்தது! நர்ஸ் ஓடிவந்தாள் ! கோமதி, திடுக்கிட்டாள் ! கோகுல் பிழைத்துவிட்டான் என்ற இன்பச் சேதி கிடைத்தது. குமாரும், கோமதியும் உள்ளே ஓடினார்கள் ! கோகுல், கோமதி யின் இடுப்பிலேயுள்ள குமாரைக் சண்டான். உண்மையாகவே. இப்போது அவன் பிழைத்துவிட்டான். அரும்பைப் பாதுகாக்கும் இரு இலைகளும் உதிர்ந்து விடுமோ என்ற நிலை இருந்தது - இப்போது, மீண்டும் இரு இலை, ஒரு மொட்டு - ஆகிவிட்டது ! இந்தப் புதிய ஆரம்பம், இனி இரு இலை, இரு மொட்டு என்று ஆவதற்கான இன்ப ஆரம்பமாக வும் இருந்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/25&oldid=1699654" இலிருந்து மீள்விக்கப்பட்டது