உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 அவள் அதனைச் சமாளித்துக்கொண்டு, அந்தச் சிற்பியை நிமிர்ந்து பார்த்தாள். அப்பப்பா ! அந்த முதிர்ந்த விழிகளில்கூட எவ் வளவு கூர்மை! அவன் குனிந்துகொண்டேவேறு பக்கம் நடையைக் கட்டினான். அவள் உள்ளத்திலே பல நாட்களாக அந்தப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நற்பணிக்குத் தன்னாலான பங்கினையும் செலுத்த வேண்டும் என்பது அவளது தணியாத ஆசை. இந்த வயதில் ஆடு மேய்ப்பதைத் தவிர அவளால் வேறு கடினமான வேலை என்ன செய்ய முடியும்? சுற்றுச்சுவர் எழுப்புகிறவர்களுக்குக் கல்தூக்கித் தர முடியுமா ? சேறு குழைக்கத் தண்ணீர் கொண்டுவந்து குடம் குடமாகக் கொட்டக்கூடிய அளவுக்கு அவள் உடலில் வலு இருக் கிறதா ? ஆனாலும், சோழப் பேரரசின் செங்கதிரோன் எனப்படும் இராசராசனின் வீரத்தையும் வெற்றிகளையும் விவேகச் செயல்களை யும் முகில்மாடத்தைத் தொட்டு நின்று வழங்கப்போகிற இராச ராசேச்சுரத்தின் எழிலுக்கும் ஏற்றத்திற்கும் தன்னாலான சிறு உதவியையாவது செய்தே தீரவேண்டும் என்று அவள் முடிவு கட்டிக்கொண்டாள். உதவி எத்தகையது என்பதைத்தான் அவ ளால் திடீரென்று தீர்மானிக்க முடியவில்லை. இரண்டொரு நாட்கள் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, அவள் கோயிற்பணி புரியும் சிற்பி களை அழைத்துத் தன் முடிவை வெளியிட்டாள். அதாவது, தினந்தோறும் மாலைப்பொழுதில் இருபது சிற்பிகள் தமது வேலைமுடிந்ததும், அவள் அளிக்கும் உணவை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாள்தோறும் இருபது பேர் என்ற வரிசையில் பட்டியல் மாறி மாறி வரும். அனைவருக்கும் ஏககாலத்தில் உணவளிக்க அளளால்- இயலாது. கிழவியின் உணர்ச்சியையும் உள்ளன்பையும் சோழ நாட்டின் மீது வைத்துள்ள பற்றையும் பாசத்தையும் புரிந்து கொண்ட சிற்பிகளும் அவளது வேண்டுகோளுக்கு இணங்கினர். அந்திப் பொழுதில் அந்தக் கிழவியின் வீட்டுச் சாப்பாட்டு முறை. யென்றால் சிற்பிகளுக்கு ஒரே கொண்டாட்டந்தான். அவள் வளர்த்த ஆடுகள் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டு வருவதைச் சிற்பிகள் கவனித்தார்கள். அவைகளை விற்றுத்தான் அவளால் சிற்பிகளுக்கு விருந்து வைக்க முடிந்தது. ஆடுகள் குறைந்துவிட்டதைப்பற்றி அவளுக்குத் துளி அளவு கூடக் கவலையேற்பட்டதாகத் தெரியவில்லை. சிற்பிகள் ஒரு நாள் கோயில் வேலைகளைக் கவனிக்க வந்திருந்த இராசேந்திரனிடம், கிழவி அழகியின் தூய்மையான அன்புபற்றியும் கடமையுணர்ச்சி பற்றியும் கூறிப் புகழ்ந்தார்கள். மறுநாள்'இரவு கிழவியின் வீட்டு வாயிற்புறத்தில் ஆயிரம் ஆடுகள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/36&oldid=1699670" இலிருந்து மீள்விக்கப்பட்டது