உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 உவ நிலைகளைத்தான் இன்னும் செதுக்கிடத் தொடங்கவில்லை. இது இராசராசன் இதயத்தில் பெருங் குறையாகவே இருந்தது. அந்த வேலை பூர்த்தியடையாமல் அவனுக்கு நிம்மதி கிடையாது. சோழன் மாளிகையில் அதுபற்றி விரிவான பேச்சு அரங்கம் ஒன்றே ஏற்பாடாயிற்று. கண்டராதித்தனை அரசன் அவசரமாக அழைத்துவரச் சொன்னான். இராசராசன், இராசேந்திரன், அவன் மனைவி பஞ்சவன்மாதேவி, குந்தவையார் முதலிய சோழக் குடும்பத்தினர் அந்த உரையாடலில் கலந்து கொண்டனர். இராச ராசன் மன நிலையை விளக்கிக், குந்தவையார் மிக உருக்கமாகக் கண்டராதித்தனிடம் கூறினார். 'அரசரின் விருப்பம் என்ன காரணம் பற்றிக் கவனிக்கப்பட வில்லை? இது குந்தவையாரின் கேள்வி. 'கவனிக்கப்படவில்லை என்று கற்பனை செய்வது தவறு. நாடெங்கும் தேடிப் பார்த்த பின் சென்ற கிழமைதான் ஒரு கைதேர்ந்த சிற்பியைக் கண்டு பிடித்தேன்." இது கண்டராதித்தன் பதில். "கைதேர்ந்த சிற்பியைக் கண்டு பிடித்து ஒரு கிழமையான பிறகும் சிற்ப வேலை தொடங்கப் பெறாமைக்கு என்ன விசித்திரக் காரணம் வைத்திருக்கிறாய்? அரசனின் ஆத்திரம் கலந்த வினாவுக்குக் கண்டராதித்தன் நிதானமாகவே விளக்கமுரைத்தான். பண்பின் “கல்லில் உயிரூட்டித் துள்ள வைக்கும் சிற்பி அவன் ! அவன் இளம் வயதினன்தான் ! ஆனால், அவனது கலையில் முதிர்ச்சி இருக்கிறது. கருங்கல் பாறையிலே மென்மையான மலர்களைக்கூடச் செதுக்கிவிடுகிறான். உளியைக் கையில் எடுத்து, ஒரு பாறையின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினான் என்றால், சிறிதுநேரத்திற்கெல்லாம் அந்தப் பாறை 'ஃயில் பாவையொருத்தி சிரிக்கிறாள் ; பழம் கொத்தும் கிளியைக் காட்டுகிறான்; பண் இசைக்கும் ஆயனை மாயனை அனைவரையும் நம் எதிரே நிறுத்துகிறான்." "யார் அவன்? பெயர்? "மாமல்லபுரத்திலிருந்து வந்திருக்கிறான். அவன் பெயர் இனியன். “அவ்வளவு ஆற்றல் படைத்தவன் தாண்டவச் சிற்பங்களை அமைக்கத் தாமதம் செய்வது ஏன் என்பதுதான் என் கேள்வி ! "அதைத்தான் சொல்ல வருகிறேன் ; தாண்டவச் சிற்பங்களை அவன் ஆக்குவதற்கு உதவியாக, நடனக் கலையை முறையோடு பயின்று, நல்ல தேர்ச்சிபெற்ற பெண்ணொருத்தி அவன் எதிரே நின்று, தேவைப்படும் போதெல்லாம் தாண்டவ நிலைக்கு ஏற்றவாறு க.க.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/39&oldid=1699676" இலிருந்து மீள்விக்கப்பட்டது