உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 சுவைத்துக்கொண்டே ஒருவாறு அன்றையப்பணியை முடித்தான். "சிலை மிக அழகாயிருக்கிறது!' என்றுசாமுண்டி பாராட்டிவிட்டுத் தான் போனாள். ஆனால் அவனுக்கு என்னவோ அவ்வளவு திருப்தியில்லை. இப்படியே சில நாட்கள் நகர்ந்தன. சாமுண்டியின் உள்ளத் திலும் இனியனைப் பற்றிய குழப்பம் எழுந்திருக்கிறது என்பதற்கு அறிகுறிகள் அவள் முகத்தில் தோன்றியவண்ணம் இருந்தன. அன்று எண்பத்தொன்றாவது சிற்பத்திற்கான அபிநயத்தைச் சாமுண்டியிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்தான். "இறைவன் நான்கு புஜங்களுடன் மானாடவும் மழுவாடவும் யக்ஞோபீதத்துடன் ஆடும் தாண்டவத்திற்கான பாவ நிலைகளை ஆடிக்காட்டு!' - என அவன் கூறியதும் அவளும் அந்த பாவத்தை அவனுக்குப் பகுதி பகுதியாகப் பிரித்து அங்கங்களின் அசைவுகளைக் கூடத் தனித் தனியாக விளக்கிக் காட்டும் தோரணையில் ஆடிக் காட்டினாள். < "இந்தக் கையை கொஞ்சம் உயரத் தூக்கி நின்றால் இன்னும் அழகாயிருக்குமல்லவா ?"- என்று கேட்டபடி அவன் சாமுண்டி.. யின் கரத்தைத் தொட்டு அதை உயரத் தூக்கப் போனான். அவளோ சட்டென்று அவனை விட்டு நகர்ந்துகொண்டாள். அவள் கன்னம் சிவந்திடும்-நாணம் பொங்கிடும் - தலை குனிந் திருப்பாள் என்றெல்லாம் எதிர்பார்த்த இனியன் ஏமாந்து விட்டான். அவளோ, அப்படியொரு நிகழ்ச்சி நடக்காதது போலத் தொடர்ந்து தன்னுடைய கலைப் பணியைத் தொடங்கினாள். இனியன் முகத்தில் அசடு வழிந்தது. அவள் தன்னை விரும்பவில்லையா ? "இனியன், எழிலன் என்று ஊர் முழுதும் பேசுவார்களே ! என்னுடைய உடற்கட்டையும், உறுதியான தோள்களையும் பார்ப்பவர்கள் நீ ராஜ வம்சத்தில் பிறந்திருக்க வேண்டியவன் என்று பாராட்டுவார்களே ! அப்படிப் பட்ட என்னை இந்தச் சாமுண்டிக்கு மட்டும் பிடிக்கவில்லையா ? என்றவாறு கேள்விகள் அவன் இதயத்தைச் சல்லடைக் கண் களாக்கிக்கொண்டிருந்தன. அத்துடன் அன்றைய வேலையும் தங்கு தடையின்றி நடைபெற்றது. பயத்திலும் பரபரப்பிலும் அவன் வேலையில் தீவிரங்காட்டி மாலைப் பொழுதுக்குள்ளாகவே அந்தச் சிலையை முடித்துவிட்டு, "நாளைக்கு எண்பத்திரண்டாவது சிலை" என்று அவளிடம் கூறினான். அன்றையச் சிலையின் அழகைச் சாமுண்டி வெகுவாக விமர்சித் தாள். “நான் ஆடிக் காட்டிய பாவங்களைத் தங்கள் உளியின் வலிமையால் படைத்து விட்டீர்கள்!” என்று அவள் புன்னகை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/47&oldid=1699684" இலிருந்து மீள்விக்கப்பட்டது