உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அடமானம். 51 அந்தத் தைரியத்தில்தான் அவர் என் நெஞ்சத்தைக் குத்திக் கிளறிவிட்டார். அவருக்கு நான் பட்டிருக்கும் கடன் 500 ரூபாய். உலோபி மனுஷன் நம்மை நம்பி எப்படிக் கடன் கொடுத்தார் என்று நினைத் தேன். அவருடைய தாராள புத்தியின் சரியான காரணம் இப்போதுதான் தெரிந்தது. குமுதா என் பெண், ஆசை மகள். அவள் அம்மா சாகும்போது குமுதாவை என்னிடம் ஒப்படைத் தாள். குமுதாவுக்கு வாழ்க்கையில் துன்பம் தோன்றவே கூடாது என்று எண்ணினேன். ஆனால், கடவுள் அப்படி நினைக்கவில்லை. உலக நாதரையல்லவா எமனாக அனுப்பியிருந்தான் பாழும் கடவுள்? அன்று உலகநாதர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஏதோ சாகுபடி விஷயம் என்று நானும் போனேன். "வா, உத்தண்டி!’> என்று அவர் அழைக்கும்போதே அவரது முகத்தில் ஆவல் ததும்பிக் கொண்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் யாருமே இல்லை, "ஏண்டா உத்தண்டி!' என்று அதிகாரத் தோரணையில் கூப்பிடும் அவர் அன்று பரிவோடு என்னை அழைத் தார். அகம்பாவமாகவே என்னிடம் நடந்துகொள்ளும் அவர் சில நாட்களாக அன்பு வார்த்தைகளையே உபயோகித்தார். சந்தோஷப்பட்டுக்கொண்டேன். “ஏன் எஜமான் கூப்பிட்டீங்களாம்?" என்று கேட்டுக் குனிந்து நின்றேன். "கடனை வளர்த்துக்கொண்டே போகிறாயே, வட்டி வளருதே, தெரியலியா ?" என்று கேட்டார், அஸ்திவாரத்தைப்' பலமாகப் போட்டுக்கொண்டார். நான் அவர் கருத்தை முதலில் அறியவில்லை ; பேசாமல் நின்றேன். "உன் மகளுக்குக் கல்யாணம் காட்சி நடத்தவில்லையா ?" என்று அடுத்த கேள்வியைப் போட் டார். அதையும் நான் விகற்பமாகக் கருதவில்லை. பண்ணையாள் குடும்பத்திலே அய்யாவுக்கு எவ்வளவு அக்கறை என்று ஆனால், அதை அவர் நீடிக்க: விடவில்லை. "நம் வீட்டு அண்ணிக்கு வேலைக்காரி ஒருத்தி வேண்டு மாம். கல்யாணம் ஆகிற வரையிலே உன் மகளை இங்கே விட்டு வையேன் என்றார். நான் அப்போதுதான் தடுமாறினேன். "அவள் குழந்தைங்கோ, தனியா இங்கே இருக்க பயப்படுவாளே' என்று பல்லைக் காட்டினேன். "உன் மகளைக் காட்டிலா கொண்டு' வந்து விடப்போகிறாய் ? அட பைத்தியக்கார மனுஷா !'” என்று ஏளனம் செய்தார் உலகநாதர். எனக்கு என்ன சொல்வ. தென்றே புரியவில்லை. "எப்போதும் இங்கேதான் இருக்கணுமா?' ?/ என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். ‘அட ஒரு இரண்டு மூணு மாதத்துக்கு இருக்கட்டுமே, என்ன உன் பெண் தேய்ந்தா போய்விடுகிறாள் ! கண்ணம்மாவோடு இருந்து பழகினால். குடும்ப விஷயமும் புரியும். வேறு ஒரு புருஷன் வீட்டுக்குப்" போனாலும் நல்ல குடித்தனக்காரியென்று பெயரெடுப்பாள்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/57&oldid=1699700" இலிருந்து மீள்விக்கப்பட்டது