உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

53 சொன்னாள். அவைகள் என் காதில் ஈட்டிகளைப் பாய்ச்சின. அதற்குள் எஜமானி கண்ணம்மா, "குமுதா, குமுதா!" என்று அழைத்தாள் ; குமுதா ஓடிவிட்டாள். நான் வீடு திரும்பினேன். அன்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. 'குமுதா ! குமுதா !" என்று புலம்பினேன். யாகிவிட்டார்கள். என் தங்கை மகன் வீரனுக்காக என் அருமைக் குமுதாவை வைத்திருந்தேன். வீரனையும் குமுதாவையும் மணக்கோலத்தோடு பார்க்க எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குமுன் அவர்கள் ஜோடி கல்யாணத்தை முடித்துவிடலாமென்று இருந் தேன். இந்த கபோதியிடம் காசு ஏது ? காசில்லாக் கஷ்டத்தால் தானே நான் உலகநாதர் உத்தரவுக்கு இணங்கி என் குமுதாவை வேலைக்காரியாக அனுப்பினேன் ! இந்தக் கண்ணம்மா இவ்வளவு கைகாரி என்று எனக்குத் தெரி யாதே! என் வயிற்றை எரியவிட்டுவிட்டாயே! அடி விபச்சாரி ! கண்ணம்மா : ஆம்! நான் விபச்சாரிதான். அது என் குற்றமா? என் மனத்துக் கேற்றவனை மணம் முடித்திருந்தால் என் நிலை இப்படி ஆகி இருக்குமா ? நான் சிறுமியாயிருக்கும்போது, எவ்வளவோ நல்லவ ளாகத்தான் இருந்தேன். ஊரில் கண்ணம்மா என்றாலே தனிப் பிரியந்தான் காட்டினார்கள். எனக்குக் கடவுளிடத்தில் அபார் பக்தி இருந்தது. கிழமை தவறினாலும் தவறும், என்னுடைய விரதங்கள் தவறா. அம்பிகைக்குப் படையல் செய்துவிட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்காலத்தில் ஒரு பெரிய 'பக்திமானி'யாக வேண்டுமென்ற பேராசையால் என் நெஞ்சம் நிரப்பப்பட்டிருந் தது. சதா சர்வ காலமும் தெய்வத்தின் திருநாமங்களையே உச்சரித்துக்கொண்டிருப்பேன். இப்பொழுதுதான் என்ன ? எப் பொழுதும் ஆண்டவனைத் துதித்தவண்ணமேதான் இருக்கிறேன். குற்றம் செய்தவர்கள்தானே மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண் டும் ! நான் செய்த விஷமகரமான விபரீதச் செயல்களுக்குக் கடவு ளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளத்தானே வேண்டும் ! ஆனால் ஒன்று ; அதை யாரும் கவனியாது விட்டுவிடாதீர்கள். பகவா னிடம் மன்னிப்புப் பெற்றுவிடலாம் என்ற தைரியத்தில் நான் இன்னும் என்னுடலில் ஊறிப்போன செய்கைகளை விட்டுவிடாமல் தான் இருக்கிறேன்; அதை ஏன் கேட்கிறீர்கள் ! விபச்சாரி வேதாந் தம் பேசுகிறாள் என்று கூறுவீர்கள், விவேகமொழி கூறுகிறாள் என்று ஏளனம் செய்வீர்கள். என்னைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா ? இதோ பதில் ! கண்ணம்மா ஒரு விபச்சாரி ! கண்ணம்மா ஒரு பக்த சிரோன்மணி! இன்னும்வேண்டு மானாலும் இதோ விளக்கம், கேளுங்கள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/59&oldid=1699703" இலிருந்து மீள்விக்கப்பட்டது