உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 பானேன்உலகநாதருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆமாம், வாழ்க்கையை ஒப்பந்தம் செய்துவைக்கப்பட்டேன். அதன் பெயர் திருமணமா? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுக் கரடியோடு கொஞ்சு என்று கட்டளை இடுவதற்குப் பெயர்தான் 'திருமண' மென்றால், எனக்கு நடந்ததும் திருமணம்தான். விஷத்தை. வேலில் தடவி விழியில் செருகுவதற்குப் பெயர்தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்றால் எனக்கு நடந்ததும் வாழ்க்கை ஒப்பந்தந்தான்! உலகநாதர் எனக்குக் காண்டாமிருகமாகத் தோன்றினாரே யொழியக் கணவனாகக் காட்சியளிக்கவில்லை. உலகத்தின் விகாரமே உருப்பெற்றெழுந்ததுதான் உலகநாதர். நான் என்ன செய்வேன்! அவருக்கு என்னவோ இளமை இருந்தது உண்மை. ஆனால், என் இதயத்தைக் கவரும் இன்ப முகம் கிடையாதே ! அவர் வாலிப முறுக்குள்ளவர்தான். ஆனால், அந்த வடிவம் வராகத்தைப் பழிப் பது போலவா இருக்கவேண்டும் ? இவைகளை நான் பொறுத்துக் கொள்ளக்கூடாதா என்று நீங்கள் கேட்பீர்கள். 'புல்லென்றா லும் புருஷன், கல்லென்றாலும் கணவன்' என்று புராணக் காலட்சேபங்கூட நடத்துவீர்கள். என் நிலையில் நீங்கள் இருந்து பார்த்தால் அப்படிப் பேச மாட்டீர்கள். உலகநாதரின் குரலைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை, வாயைத் திறந்தாலே போதும், வாந்தி யெடுப்பவனுக்கு வயிற்றிலிருந்து கிளம்புவது போன்ற வறட்டுச் சப்தம். அதைக் கோகிலத் தொனி என்றுதான் கூறிக் கொள்ள வேண்டுமா ? நீங்கள்தான் தீர்ப்புக் கூறுங்களேன். என்னைப் பற்றி நானே கூறிக்கொள்வதாக எண்ணாதீர்கள். ஒரு பணக்கார வீட்டுப் பெண், போதுமான அழகுடையவள், இளமை யின் எழுச்சியிலே, இன்பத்தின் அடிவாரத்தில் உலாவத் தொடங் குபவள், 'எண்ணாத எண்ணங்கள் எண்ணியவள்' எதிர்காலத்தைப் பற்றி எட்டாத 'பேராசைக் கோட்டைகள்' கட்டியவள், "கண்ணம்மாளா ? கட்டழகியாயிற்றே ! கட்டுடல் வாய்ந்தவளா யிற்றே ?" என்று ஊராரின் மதிப்புரையைப் பெற்றவள்-கடைசி யில் கண்ணராவியான மனிதனைக் கட்டிக் கொள்வதென்றால் அது நியாயமா? பச்சிளங் குழந்தையும் பரிகாசஞ் செய்யுமே! தோழி கள் 'தூ' என்று துப்புவார்களே ! இது என்ன வராகவதாரத்தைக் கண்டு பூமாதேவி விரகதாபங் கொண்ட காலமா ? அதுவுமில்லையே! என்னை விபச்சாரி என்று கூறுகிறீர்களே ! எனக்கு அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்தது உங்கள் வைதீக உலகந்தானே ! வாழ்வில் கோணல் ஏற்பட்டுவிட்டதே என்று வாடினேன் ; வதங்கினேன். ஆனால் அதை உலகநாதரிடம் காட்டிக் கொள்ள வில்லை. என் தாய் தந்தையரைச் சபித்துக்கொண்டிருந்தேன், என் சாபங்களுக்கு மட்டும் சக்தி இருந்திருக்குமானால், இந்த உலகமே அழிந்துபோயிருக்கும். என் தாயகத்திலிருந்து சீதனங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/62&oldid=1699708" இலிருந்து மீள்விக்கப்பட்டது