உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 வீரன் என் வலையில் சாதாரணமாக விழுவேன் என்றானா ? அப்பப்பா ! எவ்வளவு கஷ்டம்! எஜமானி அம்மாள் ஆயிற்றே என்று முதலில் பார்த்தான். பெரிய இடத்து விஷயமாயிற்றே என்று கலங்கினான். 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்பதை அவன் எப்படி அறிவான்? பாவம் ! எப்படியோ காரியம் கைகூடிற்று. என் கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வாசலில் கைகட்டி நிற்கும் வண்டிக் காரனுக்கு, ரயிலுக்கு வண்டி கொண்டுபோகும் வேலை மட்டுந் தானா ? என்னை வட்டமிடும் வேலையும் வந்து சேர்ந்தது. உலக நாதர் ஊரிலே ; நானும் வீரனும் உல்லாசபுரியிலே ! அவர் காட்டிலோ மேட்டிலோ அலைவார். அதைப் பற்றிக் கவலை யில்லை; நாங்கள் கட்டிலிலே ! வீரனுக்கு முதலில் என்னைத் தீண்டுவதற்குப் பயம் ; தீண்டிய பிற்பாடு அய்யா பார்த்துவிடுவாரோ என்ற அச்சம் ; சங்கதி பரவி விடுமோ என்ற சந்தேகம் ; கடைசியில் அவர் எப்பொழுது வெளி யூர் செல்வார் என்ற ஏக்கம் ! இந்த நிலைமையில் எங்கள் காதல் வளர்ந்தது. மாதங்கள் ஒன்று இரண்டு. இப்படிப் பல மாதங் கள்; ஏன், இரண்டு மூன்று வருடங்களும் ஆகிவிட்டன. இதில் இன்னொரு பயங்கரமும் நடந்துவிட்டது. நானும் வீரனும் சேர்ந்து கொலையும் செய்துவிட்டோம். என் வயிற்றில் வளர்ந்த இரண்டரை மாதச் சிசுவை யமலோகத்திற்கு அனுப்பினோம். அதற்கு வீரன்தான் மருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுத் தான். பிறக்கும் குழந்தை வீரனைப்போல் இருந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே கொலைக்குக் காரணம். இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள், கண்ணம்மா ஒரு கொலைகாரி என்று! அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் உடம்பில் ஏதாவது கூச்சம் இருந்தால்தானே ! என் மனசுதான் மரத்துப்போய்விட்டதே ! குழந்தையை அழித்த சில நாட்களுக்குப் பிறகு வீரனுக்கும் எனக்கும் நடுவே ஒரு தொய்வு ஏற்பட்டது. திடீரென்று வீரன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். என்னைக் கண்டாலே பிடிக்காதவன் போல் நடந்துகொண்டான். நான் ஏதாவது கேட்டால் 'வெடுக்'கென்று பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான். எத்தனையோ முறை உலகநாதர் வெளியூர் சென்று வந்தார். நான் அந்த நேரங்களையெல்லாம் தனியாகவே கழித்து வந்தேன். பலமுறை வீரனுக்கு ஆள் அனுப்பிப் பார்த் தேன். அவசரச் செய்தி என்று கூப்பிட்டேன். ஒன்றுக்கும் அவன் அசையவில்லை. காரணம் தெரியாது தவித்தேன். என்னுடைய கலக்கத்தைக் கண்டு என் கணவர், “எ ன் ன கண்ணம்மா வருத்தம்?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, உடம்பு சரியில்லை" என்பேன். உடனே அவர் எனக்குச் சிகிச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/64&oldid=1699710" இலிருந்து மீள்விக்கப்பட்டது