உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

61 ளம் இருபது ரூபாய் என்று குறிப்பிட்டார். கிழவன் ஏமாந்து விட்டான். பணத்தைப் பார்க்காதவன்தானே அந்தப் பஞ்சை! குமுதாவை எங்கள் வீட்டு வேலைக்காரியாக அனுப்பிவிட்டான். குமுதாவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஆனால், இப்பொழுது குமுதா பருவம் அடைந்த மங்கை. அவளது லாவகமான நடையும், முகத்தின் களையும் பெண்ணான என்னையே ஆசைப்பட வைத்தன. குமுதா வீட்டுக்கு வந்ததுமுதல் மிகவும் மரியாதையாகவே பழகினாள். அவளுடைய சிந்தனை மட்டும் எங்கேயோ இருந்தது. அதை அவளால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி வாசல் பக்கம் செல்வாள். எங்கேயோ சுற்றுமுற்றும் பார்ப்பாள். எனக்கல்லவா தெரியும், அவள் யாரைப் பார்க்கிறாள் என்று ! அந்தச் சிறுமி வீரனிடம் கொண்டிருந்த கள்ளங்கவடமற்ற காத லில் நான் நச்சுப் பொடி தூவத் தயாராயிருந்தேன். ஒரு குமுதா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்தன. நாள் இரவு நான் அவளோடு சம்பாஷணை துவக்கினேன். இதற் குள் என் கணவர் பட்டபாட்டை நினைத்துக்கொண்டு நானே சிரித் தேன். குமுதா தன் வீட்டுக் கதைகளை எல்லாம் சொன்னாள். நான் அவள் பேச்சில் என் பசப்பு வார்த்தைகளைப் பின்னிக்கொண்டே வந்தேன். எங்கெங்கோ ஆரம்பித்துக் கடைசியில் உலகநாதர் குமுதாவிடம் கொண்டிருக்கும் ஆசைவரையில் கூறிவிட்டேன். குமுதா ஒன்றும் பேசவில்லை! பேசாமற் போய்ப் படுத்துக் கொண் டாள். சற்று நேரத்துக்குப் பிறகு குமுதா விம்மி விம்மி அழுத சப்தம் மட்டும் எனக்குக் கேட்டது. அன்றிரவு அதோடு முடிந்தது. மறுநாள் காலை கொல்லைப்புறத் தோட்டத்தில் குமுதா தன் தகப்பனுடன் பேசிக்கொண்டிருந்தாள். குட்டி தப்பித்துக் கொள்வாளோ என்ற பயம் எனக்கு. 'குமுதா ! குமுதா !" என்று அதட்டலாகக் கூப்பிட்டேன். ஓடிவந்துவிட்டாள். எனக்குத் தெரியாமல் அவள் கண்களைத் துடைத்துக்கொண்டதை நான் பார்க்காமல் இல்லை. வீரனை நான் மறுபடியும் அடையும் பொருட்டு குமுதாவை என்ன செய்தால் என்ன ? என்னை வந்தடையும் பழிபாவங்களுக்கு நானா பொறுப்பாளி? 'எண்ணிய படி எதுவும் நடக்காது' என்ற சட்டமும், 'அவனன்றி ஓர் அணு வும் அசையாது' என்ற உறுதியும் இருக்கிற உலகத்திலே நான் ஒரு குற்றமற்றவள்தானே! இந்தத் தைரியத்தில் நான் குமுதாவின் நல்வாழ்வில் நஞ்சைக் கலந்தேன். அந்தக் காரியத்தைச் செய்யும் போது என் உடல் பதறவில்லைதான். தோட்டத்தில் உத்தண்டி யைச் சந்தித்து, குமுதா பேசிய அன்றிரவே நான் அந்தச் சதியைச் செய்தேன். உங்கள் பாஷைப்படி அது 'சதி'யாக இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/67&oldid=1699713" இலிருந்து மீள்விக்கப்பட்டது