உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 எஜமானர் ஊருக்குப் போய்விட்டால் கண்ணம்மா எனக்குச் செய் யும் உபகாரங்கள் பலமாயிருக்கும். வெகுநாள் வரையில் எனக்கு அது ஏன் என்று புரியவில்லை. C ஒரு நாள் கண்ணம்மா, உலகநாதருக்கு வீட்டைப் பற்றிய கவலையே இல்லை என்று குறைப்பட ஆரம்பித்தாள். 'ஆமாங்க. அண்ணி" என்று நான் தலையசைத்தேன். இன்னொரு நாள், "உலகநாதர் நடத்தையே சரியில்லை வீரா ! என்று கண்ணம்மா கூறினாள். அதற்கும் ஆமாம் போட்டுவிட்டு நகர்ந்தேன். "உட்காரு வீரா ! அவரும் ஊரிலில்லை. ஏதாவது ஊர்க்கதை இருந்தால் சொல்லு” என்று வற்புறுத்தினாள். இரவு பத்துமணி' வரையில் என்னென்னவோ வம்பளந்தாள்; பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். எனக்கு வீடு ஏது ? மாமன் வீட்டுத் திண்ணை யில்தான் படுக்கை. மற்றொருநாள், "உலகநாதரைக் கண்டாலே எனக்குப் பிடிக் கிறதில்லை; சுத்த அசடு !" என்று கண்ணம்மா கதையைத் துவக் கினாள். நானும் உட்கார்ந்து கதையைக் கேட்டுக்கொண்டிருந் தேன். உலகநாதரோடு வாழ்க்கை நடத்துவதே கசப்பாக இருக் கிறது" என்று, முடித்தாள் ; "எல்லாம் சரியாகிவிடும் அம்மா என்று சொல்லிவிட்டு எழுந்தேன். 'என்னப்பா அவசரம் என்று என் துண்டைப் பிடித்து இழுத்தாள் கண்ணம்மா. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் பெரிய இடத்துப் பெண்ணுடன், அதுவும் இளம்வயதுள்ள பெண்ணுடன், உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே எனக்குப் பயத்தைக் கொடுத்து வந்தது. நிலைமை இப்படி விபரீதமாகிவிட்ட பிறகு என்னால் என்ன செய்ய முடியும்? "விடுங்கள் அம்மா" என்று கூற வாயைத் திறந்தேன். வாயில் நீரில்லை ; வற்றி விட்டது. நாக்கை அசைக்கவும் முடியவில்லை. ஈரமில்லாத தொண்டைக் குழியில் ஏதோ ஒரு தொந்தரவு ஏற்பட்டது போல் இருந்தது. அதற்குள் நான் மெய்ம்மறந்துவிட்டேன். கண்ணம்மா வின் கரங்கள் என் தலையைக் கோதிக்கொண்டிருந்தன. 'முண்டாசு அவிழ்ந்து விழுந்துவிட்டதையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு நல்ல இடத்துப் பெண் இவ்வளவு கேவலமாகப் போய்விட்டாளே என்ற ஆச்சரியத்தால் என் இருதயம் வாயு வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. உலகநாதர் பண்ணையைப் பற்றி ஊரிலே எவ்வளவு புகழ் ! அந்த வீட்டு அம்மாள் சாதாரண ஒரு கூலிக்காரனுக்கு ஆசைநாயகி ஆவதென்றால் எவ்வளவு மட்ட ரகமான தன்மை என்பதை முதலில் சிந்தித்தேன். சிந்தனை நீண்டநேரம் நிற்கவில்லை. சிசுப் பருவத்திலேயே சிதைந்துவிட்டது. எஜமானியம்மாளுக்கு விரோதமாக நடக்கவோ, விருப்பத்தை மறுக்கவோ எனக்கு மனம் வரவில்லை. தாட்சண்யத்திற்காகத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/72&oldid=1699722" இலிருந்து மீள்விக்கப்பட்டது