உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 னுக்கு அல்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவனுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகிவிட்டேன்! பாவம் ! அத்தானுக்காகச் சுமந்துகொண்டிருந்த உடல் அழுக்குப் பட்டுவிட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல, அவள் நம்பி யிருந்த அத்தானின் இதயத்திலிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி ! எங்கள் வண்டி 'கடகட'வென ரயில் நிலையத்தை நோக்கி' ஓடிற்று ; குமுதா எரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது. ஒரு நரியின் பயங்கரமான ஊளை, சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குமுதாவுக்காக அந்த ஒரு ஜீவன் தான் அப்பொழுது அழுதது போலும்! குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று. எங்கள் கல்கத்தா வாழ்வைப்பற்றி ஒரு வார்த்தை ! பக்தர் கள், சுத்த மூடர்கள் ; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டுமென்கிறார்களே, அசடுகள் ! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமாயிருப்பதை ! நான் இந்திராணி ! வீரன் இந்திரன் ! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக்கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/78&oldid=1699731" இலிருந்து மீள்விக்கப்பட்டது