உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 காதைத் தொட முயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்தில் அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊராரைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். வீதியிலே கிருஷ்ணன் - சத்தியபாமா விக்ரகம் அலங்கரிக்கப் பட்ட அழகான ரதம் பவனி வந்துகொண்டிருந்தது. ‘வீரன்' கிருஷ்ணன் நரகாசூரனிடம் தோற்று மயங்கும் வேளையிலே, தனது கணைகளைக் கொண்டு அசுரனை அழித்தாள் பாமா என்பதுதானே புராணம். சங்கு சக்ராயுதபாணியான விஷ்ணுவின் அம்சம் பரமாத் மாவே வீழ்ந்துவிட்டபோது-அவரின் தேவி, அசுரசிங்கத்தின் உயிரை அணைத்துவிட்டாள் என்றால் ஆச்சரியமாகத்தானிருக்கும். எக்கணை வீசினாளோ ; என்ன வக்கணை பேசினாளோ ; எப்படியோ தேவியின் தியாகத்தால் தேவர்களின் எதிரி ஒழிந்தான் என்று திருப்தி கொண்டனர் பக்தர். அந்தப் பக்த கோடிகள் பரந்தாமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடி, அவனையும் அவன் பிராட்டி பாமாவையும் ரதத் திலே வைத்துத் தெரு சுற்றினர். வெற்றியின் சூட்சமம் தெரி யாத விளையாட்டுப் பிள்ளைகளும், பரமாத்மாவுக்கு 'ஜே' போட்ட னர். ஊர்ப்பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நாயன வித்துவான்கள் தங்கள் திறமையைப் பொழிந்தனர். வீடெங்குமுள்ள பெண்டிரெல்லாம் ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ஆனந்தப் பட்டனர். ஆடினர் பாடினர். ஆனால் நாராயணியோ ஆடவுமில்லை ; ஆரத்தி எடுக்கவு மில்லை ; நடக்கும் வைபவங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்தாள். பரமாத்மாவின் ஊர்வலம் அவள் வீட்டைத் தாண்டிப் போயிற்று. அந்த வீட்டிலிருந்து யாராவது வந்து பகவானுக்குக் காணிக்கை செலுத்துவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். யாரும் வரவில்லை. ரதம் போகும் திக்கைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே யிருந்தாள் நாராயணி. ரதத்திலே நரகாசுர வதமே சித்திரிக்கப் பட்டிருந்தது. அந்தக் காட்சியை அவள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மலையெனத் தோள் படைத்த நரகாசுரனின் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருக்கிறது. குகை யெனத் திறந்த வாயோடு நிற்கிறான் அவன். அவனெதிரே கிருஷ்ணன் - மயங்கிய நிலையில் ! பாமா - வேல்பாய்ச்சும் சாய லில் ! இதுவே' ரதத்தில் சித்திரிக்கப்பட்டிருந்த தீபாவளிக் காட்சி. அறிவுக்கு அணைகட்டி, இன உணர்ச்சியைத் தடுக்கப் பெரும் சுவரும் எழுப்பி வைக்கும் அந்தப் பண்டிகையில் தம்மை மறந்து பங் 'கெடுத்துக்கொண்டு, பரவசமுற்றனர் அந்த ஊரார். நாராயணி யின் கண்களைவிட்டு ரதம் மறைந்தது. வாணச் சத்தம் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/80&oldid=1699736" இலிருந்து மீள்விக்கப்பட்டது