உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 வயதோ முப்பதுக்குமேல் இல்லை. இந்த ஒரு முதல் போதாதா - காதல் வியாபாரத்தை ஆரம்பிக்க? ஐம்பது அறுபது ஆனதுகளே, நரை மயிர் கருக்கும் தைலம் தடவிக்கொண்டு, பொய்ப்பல்லால் புன்னகை புரிந்து, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையென்று காதல் வாணிபம் நடாத்தக் கன்னியரைத் தேடியலையும்போது; முப்பதே வயதான கிருஷ் ணய்யர் மட்டும் சும்மா இருப்பாரா ? அதுவும் புறா வலுவிலே- பறந்து வருகிறது, வட்டமிட்டுப் போகிறது என்றால், கேட்கவும். வேண்டுமா? நாள்தோறும் நாராயணி ஆண்டவன் சந்நிதியிலே கண்ணீர்த் துளிகளைச் சிந்தினாள். கிருஷ்ணய்யர், விபூதிப் பிரசாதம் அளித்து வந்தார். இந்த விஷயம் பல நாட்கள் மௌனமாகத்தான் நடந்து வந்தது. மாலை எப்போது வரும் ; அப்போது அந்த மயிலும் வருமே என்று பாதை மீது பார்வையை விரிக்க ஆரம் பித்தார் கிருஷ்ணய்யர். நாராயணி கடவுளின் முன்னே தினம். தினம் அழவேண்டிய காரணம் என்ன ? குருக்களின் இதயத்தைக் குடைந்தது இந்தக் கேள்வி. அவளையே கேட்டுவிடத் தீர்மானித் தார். ஆனால் அவள் வரும் நேரத்திலேதான் அந்தப் பாழும். பக்தகோடிகளும் ஆலயத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. தனிமையில் அவளிடம் பேச அவருக்கு வாய்ப்பில்லாமலே போய் விட்டது. ஒருநாள் சோமவாரம் - கோயிலில் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்பட்டன. நல்லகூட்டம். கச்சேரிகள் வேறு. அந்த ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் காங்கிரசிலே சேர்ந்துவிட்டதற்காக நடத்தப்பட்ட திருவிழா அது. கோயிலுக்கு எதிரேயுள்ள காளி மண்டபத்தில் ஆடு வெட்டிப்பலி கொடுத்துக் கள்ளுக் குடங்களும் வைத்துப் படைத்துக் காந்தியாரின் கொள்கைக்குப் பெருமை கொடுத்தார்கள். அதையொட்டிப் பெரிய கோயிலிலும் உயர்ந்த. முறையிலே உபயம் நடத்தினார்கள். - அன்றையதினம் வழக்கம்போல் நாராயணி வந்தாள். காத். திருந்த அய்யரும் பூத்திருந்த மல்லிகை வந்துவிட்டதென மகிழ்ந் தார். பரதம் நடக்குமிடத்திலும், பாட்டுக் கச்சேரி நடக்கு. மிடத்திலும் பக்தர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தனர். நாராயணீயோ கர்ப்பக் கிரகத்திற்குள்ளே நுழைந்தாள். தாமரை மொட்டுப்போல் கரங்குவித்தாள். காமனை வெல்லும். விழி மூடினாள். இமை அணையைப் பிளந்துகொண்டு கண்ணீர் வெள்ளம் புறப்பட்டுக் கன்னத்தின் மேட்டிலே கிளைகளாகப் பிரிந் தது. ஆழ்ந்த பக்தியிலே மெய்ம் மறந்து நின்றாள். 'எனக்கு வழி காட்டு அப்பனே ! என்னை மட்டும் உலகத்திலே ஜீவித்திருக்க ஏன் "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/82&oldid=1699739" இலிருந்து மீள்விக்கப்பட்டது