உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

83 என்று அவள் பாடாததுதான் பாக்கி. அவ்வளவு பக்தியும் பாச மும் புருஷன்மீது ஏற்பட்டுவிட்டது அவளுக்கு. - குஷ்டரோகிக் கணவனைத் தாசியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி தேவலோகத்து மாதர்கள் கற்பரசிகளாய் இல்லாத போது, பூலோகத்தில் மட்டும் கற்பரசிகள் இருக்கலாமா ? அவர் களைச் சோதிப்போம்' எனத் தோள் தட்டிப் புறப்பட்டு, நிர்வாண மாக வந்து சோறு பரிமாறச் சொன்ன மும்மூர்த்திகளைக் குழந்தை களாக மாற்றி நிர்வாணக் கோலத்தோடு அன்னமிட்ட அனுசூயா- இத்தகைய பத்தினிகளை யெல்லாம் தோற்கடிக்கும் அளவுக்குப் பதி சொல் தட்டாத பாவையாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாராயணி ஆசைப்பட்டாள். கோயில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு கிருஷ்ணய்யர் அவசர அவசரமாக வீட் டுக்கு ஓடிவந்தார். அவரது உடலெங்கும் வியர்வைத் துளிகள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியபடி, “நாராயணி ! நாராயணி! என்று அலறினார். அவளோ “என்ன ? என்ன ?” என்றுகேட்டபடி சின்ன டை நெளிய ஓடிவந்தாள் பள்ளியறையிலிருந்து ! அய்யர் பிரக்ஞையற்ற நிலையில் நின்றுகொண்டு பிதற்றினார். "நாராயணி! நோக்காக நான் எவ்வளவு தியாகம் செய் திருக்கேன் ? 'ஆமாம்; அதற்கென்ன இப்போது? "ஞாபகமிருக்கா ? நேக்காக நீ உடல் பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்வேன்னு சொன்னியே ! 'ஆமாம் சொன்னேன் - இப்போதும் சொல்கிறேன் !” "நாராயணி ஆபத்து வந்து விட்டதடி ! நீ, ஆவியையும் பொருளையும் தியாகம் செய்யத் தேவையில்லை. உடலை மட்டும் தியாகம் செய் போதும் ! "என்ன சொல்கிறீர்கள் சுவாமி? "" "ஆமாண்டி கண்ணே ! என் உயிரைக் காப்பாற்ற வேணும்னா. நீ உன் உடலைத் தியாகம் செய்யத்தான் வேணும் !" " "புரியவில்லையே ! "தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு இருக்காரே ; அவருக்கு உன் உடலை.. அய்யர் வாய்மூடவில்லை. முற்றுக் கீழே சாய்ந்தாள். அதற்குள் நாராயணி மயக்க நாராயணிக்குப் பிரக்ஞை வந்தபோது, தான் கட்டிலிலே படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தன்னுடைய நெற்றியை மெதுவாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்த கைகளைத் தனது கைகளால் வெறுப்போடு நகர்த்தினாள். அப்படி அவள் நகர்த்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/89&oldid=1699721" இலிருந்து மீள்விக்கப்பட்டது