அருளாளன 15 நினைக்கும் விஷயத்தில்கூட. நாமாக முயன்று அவனை நினைப்பதாக எண்ணுகிறோம். உண்மை அது அன்று. இறைவன்தான் தன்னை நினைக்கும்படியாகச் செய் கிறான். "அவனரு ளாலே அவன்தாள் வணங்கி" என்பது மாணிக்கவாசகர் வாக்கு. ஒருவன் ஒருவன் தன்னை நினைக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளத்தில் அருள் தோன்றினால், அப்பொழுது அந்த மனிதனிடத்தில் அவ னைப்பற்றிய நினைப்புத் தோன்றுகிறது. இதை நம்பி யாண்டார் நம்பி ஓர் இடத்தில் சொல்லுகிறார்: என்னை நினைந்தடிமை கொண்டுஎன் டர்கெடுத்துத் தன்னை நினைக்கத் தருகின்றான். அவன் தன்னை நினைக்க அருள் தராவிட்டால் நாம் அவனை நினைக்க இயலாது. சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைத் தாம் நினைத்ததாக முன்னாலே சொல்ல ஆரம்பித்தவர். அதை மாற்றிக்கொண்டு, 'நினைத்தேன் மனத்து உன்னை வைத்தாய்' என்கிறார். 'எந்த வகை யினாலும் உன்னை மறவாமல் நினைக்கின்றேன்' என்று சொல்ல வந்தவர், அப்படி நினைப்பதற்கு மூலகாரணமா வந்தவர்,அப்படி யிருப்பது தம்முடைய முயற்சி அல்ல என்று தெரிந்து கொண்டார். ஆதலால் அதோடு நிறுத்தாமல், 'உன்னை நினைக்கும்படியாக என்னுடைய மனத்திலே நீ வந்து அமர்ந்தாய்' என்று சொல்கிறார். எத்தான்மற வாதேதினைக் கின்றேன்மனத்து உன்னை வைத்தாய். இப்படியெல்லாம் பாடுவதற்கு இடமாக இருந்தது திருவெண்ணெய்நல்லூர் என்னும் தலத்தில் அருள் துறை என்ற தனிப் பெயருள்ள ஆலயம். இன்றைக்கும் அந்த
பக்கம்:அருளாளன் 1954.pdf/24
Appearance