உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 அருளாளன் அவற்றை உடனே தந்தருள வேண்டுமென்றும் பாடுவார். இன்னும் சில பாடல்கள் இறைவனைப் பரிகாசம் செய்வது போலவும் அமைந்திருக்கும். இவை யாவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனிடத்தில் கொண்ட தோழமைக்கு அறிகுறிகள். வேடிக்கையாக அமைந்த பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம். அவ ஒரு குடும்பத்தில் வேலை செய்வதற்காக ஒருவன் போகிறான். போய்ச் சில காலம் வேலை செய்கிறான். பிறகு அந்த வீட்டில் வேலை செய்யத் தன்னால் முடியாது என்று கருதி விட்டு விட்டு வந்து விடுகிறான். அவனை னுடைய நண்பன் கண்டு, "ஏன் அப்பா, அந்த வீட்டை விட்டு வந்து விட்டாய்?" என்று கேட்கிறான். "நமக்கும் அந்த வீட்டுக்கும் சரிப்பட்டு வராது. நம்மால் அங்கே வேலை செய்ய முடியாது என்று அவன் சொல்லுகிறான். 'அதற்கு என்ன காரணம்?" என்று அடுத்தபடி கேள்வி வருகிறது. அதற்கு அவன் விரிவாகத் தான் பட்ட அநு பவங்களைச் சொல்லுகிறான். ": அந்த வீட்டிலே எஜமானனுக்கு இரண்டு பெண் டாட்டிகள். இரண்டு பிள்ளைகள் வேறு. வேலைக்கார னுக்கும் வயிறு இருக்கிறது; உணர்ச்சி இருக்கிறது; அவ னுக்கும் வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டிய சுகங்கள் இருக்கின்றன' என்பதைக் கொஞ்சங்கூட நினைக்காமல் அங்கே இருக்கிறவர்களெல்லாம் வேலை வாங்கினார்கள். ஆனால் எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கவனிக் கவே இல்லை. ஒரு மனைவி வாயே பேசுவதில்லை; ஆனால் பெரிய ஆரவாரம் செய்வாள். ஒரு பையன் தனக்கு வேண்டியதை வேண்டிய மட்டும் வாங்கி வாங்கிச் சாப்பிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/39&oldid=1725541" இலிருந்து மீள்விக்கப்பட்டது