42 அதளாளன் புறங்காட்டில் முதலில் உடம்பின் நிலையாமை தோன்றுகின்றது: இந்த உயிர் உடம்பிலிருந்து போய்விடும் என்ற பயம் உண்டாகிறது. அதன் பின்பு நமக்குத் துணை யாக இருப்பவன் ஆண்டவன் என்ற பக்தி எழுகிறது. பயத்துக்குப் பின் உண்டாகும் பக்திதான் சிறப்பாக நிற்கும். பயபக்தி சுடுகாட்டில் எழுகிறது. எங்கே இறைவனிடம் பக்தி உண்டாகிறதோ அந்த இடம் கோயிலுக்குச் சமமானது. இறைவனிடம் எவை இகழ்ச்சிக்கு உரிய வாக மற்றவர்களுக்குத் தோன்றுகின்றனவோ, விதமாகத் அவை உண்மையை உணர்ந்து அன்பு செய்கிறவர்களுக்கு வேறு தோன்றும்; இறைவனுடைய உண்மை இயல்புகளை அவை உணர்த்துகின்றன என்று தெரியும். அப்படித் தெரிந்துகொண்டவர் சுந்தரர். பூண் நாண் ஆவதோர் அரவம்கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன்; பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்; காணீர் ஆகிலும் காண்பன்; என் மனத்தால் கருதீர் ஆகிலும் கருதி. நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன்; நாட்டியத் தான்குடி நம்பீ! என் (திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் பெருமானே? தேவரீருக்கு மேலே அணியும் அணிகளும் இடையில் அணியும் அரைநாணும் ஆக உள்ளவையாகிய பாம்பைக் கண்டு அஞ்சமாட்டேன்; சுடுகாட்டில் நீர் ஆடுவதைக் கண்டு இகழ் மாட்டேன். அடியேனைப் பாதுகாவாவிட்டாலும் உம்முடைய பெருமையை நன்கு உணர்வேன்; இனிப் பிறக்கமாட்டேனாயினும் உம்மை மறக்கமாட்டேன்; அடியேனைக் கண்ணெடுத்துப் பாராவிட்
பக்கம்:அருளாளன் 1954.pdf/51
Appearance