58 அருளாளன் வந்து அருள் செய்ய வல்ல பிரானாகிய உன்னைத்தான் நான் நினைக்க வேண்டும். உன்னையன்றி மற்ற யாரையும் நினைக்கமாட்டேன்; புகழமாட்டேன். ஏறே ! உன்னை அல்லால் இனிஏத்த மாட்டேனே. இதுவரைக்கும் யார் யாரையோ ஏத்தியிருக்கலாம். அது என்னுடைய அறியாமை. மெய்ப் பொருள் இன்ன தன்று அறிகிற வரைக்கும் பொய்ப் பொருளை ஏத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது மெய்ப்பொருள் இன்னது என்று அறிந்து கொண்டேன். அந்த மெய்ப் பொருளாகிய நீ என்னிடத்திலே பரம கருணை உடையாய் என்பதையும் அறிந்து கொண்டேன். என்னுடைய உள் ளம் முழுவதும் நீ இடமாகப் பெற்றுக் கொண்ட பிறகு நான் வேறு யாரை நினைக்க முடியும்? நீயே உன்னை நினைக் கும்படியாகச் செய்துவிட்டாய், ஆகையினால் இனி வேறு யாரையும் புகழமாட்டேன். மோருந்து ஓரொருகால் நினையாது இருந்தாலும் வேறாவந்து என்உள்ளம் புகவல்ல மெய்ப்பொருவோ சேறு ஆர் தண்கழனித் திருமேற் றளிஉறையும் ஏறே! உன்னை அல்லால் இனிஏத்த மாட்டேனே. [தலையெடுப்பினால் ஒவ்வொரு சமயம் அடியேன் உன்னை நினைக்காமல் இருந்தாலும், எனக்கு அருள் செய்யத் திருவுள் ளம் கொண்டு தனியே என்பாவ் வந்து என் உள்ளத்தில் புகுவ தற்கு வல்ல மெய்யான பொருளே! சேறு நிரம்பிய குளிர்ந்த வயல்களைப் பெற்ற திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கும் சில் கம் போன்றவனே! இனிமேல் உன்னை அல்லாமல் வேறு யாரை யும் நினைந்து புகழமாட்டேன். மோரந்து -தருக்கினால் தலையெடுத்து, வேறா-வேருக; தனி யாக, ஏறு. சிங்கம். இனி... இப்போது.]
பக்கம்:அருளாளன் 1954.pdf/67
Appearance