உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளின் விளைவு . எ 87 பேயே' என்பன. நாயை இழிவாகச் சொல்வதற்குக் காரணம், மற்றவர்கள் கழித்த பொருளை அது உண்ணு கின்றமையே என்று சொல்லலாம். ஆனால் மற்றவர் கள் கழித்த பொருளை உண்ணுகின்ற மற்றொரு விலங்கும் இருக்கிறது. அது பன்றி. பன்றி என்று சொல்லாமல் நாயைச் சொல்வதிலே ஒரு சிறப்பு இருக்கிறது. நாய் மலத்தை உண்ணுவது இழிவுதான். ஆனால் அதைக் காட் டிலும் இழிந்த செயலை அது செய்கிறது. எந்தப் பிராணி யும் தான் ஒரு முறை உண்டு வாந்தி எடுத்தால் மீட்டும் அதை உண்ணாது.நாயோ ஒருமுறை உண்டதை வாந்தி எடுத்துவிட்டால் மீட்டும் அதை உண்ணும். அது எவ் வளவு இழிவான இயல்பு! மக்கள் பிறவி தோறும் எத்த னையோ துன்பங்களை அநுபவித்தாலுங்கூட அவற்றை மறந்து அந்தத் துன்பங்களுக்குக் காரணமான செயல் களிலே மீட்டும் ஈடுபடுகிறார்கள். ஒரு பிறவியிலேயே அது பவத்தில் இது தவறு என்று அறிந்ததை, மீட்டும் செய் கிறார்கள். இது வாந்தியெடுத்த பொருளை மீட்டும் உண்ணும் நாயின் செயலைப் போன்றதல்லவா? "நான் எத்தனையோ துன்பத்தை அடைந்திருக்கிறேன். அதற்குக் காரணமாக நான் செய்த தவறு தெரிகிறது. ஆனாலும் மீட்டும் மீட்டும் அந்தத் தவறுகளைச் செய் கிறேன்" என்று சொல்வதற்குப்பதிலாக, நான் நாய் போன் றவன் என்று சொல்வது பெரியவர்களுடைய வழக்கம். சுந்தரமூர்த்தி நாயனார் அப்படிச் சொல்கிறார்."ஆண் டவனே, நீ என்னை ஒறுத்தாய்; பொறுத்தாய். அவ்வுப் போது நான் செய்கிற தீங்குகளையெல்லாம் மறந்து என்னைத் திருத்த வேண்டும் என்று துன்பங்களைத் தந்தாய், நாய் போன்ற என்னையும் பொருட்படுத் தினாய். கண்டால் அணுகாமல் விலகுவதற்குரியது நாய். நாயைப் போல இருக்கிற என்னைக் கண்டு நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/76&oldid=1725578" இலிருந்து மீள்விக்கப்பட்டது