பக்கம்:அருளாளர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 * அருளாளர்கள்



     சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
          சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
     பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்பாய்
          பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ்
                                                                வாதோ 
    அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்னன் பெயரும்
         அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே 
    சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
        திருக்கூத்துக் கண்டளவே தெளியும் இது தோழி.
                                                       (திருஅருட்டா-5802)
என்று கூறுகின்ற முறையில் ஒர் அற்புதத்தைச் செய்து காட்டுகிறார். இதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு பகுதியை அதோடு சேர்க்கிறார்.

இவ்வளவு உயர்ந்த பொருள், அனைவருமே ஒத்துக் கொள்ளக்கூடிய ஒன்றைக் கண்ட பிற்பாடு அந்தப் பொருளை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு வழிவகுக்க வேண்டும். அதுவும் வள்ளற்பெருமான், பாரதி இந்த இரண்டு பேருமே நாட்டு மக்கள் நலமுற வாழ வேண்டும், நானிலத்தவர் மேனிலை எய்தவும்-தமக்கே உரிய முறையில் சொல்கிறார். இதுவரை சொன்னதுபோல இந்தப் பொருளைப் பற்றிச் சொல்லும் போது அது,

     “நிர்க்குன நிராமய நிரஞ்சன நிராலம்ப”

என்றால் மக்களுடைய மனம் ஈடுபடாது. ஆகவே மிக உயர்ந்ததாகிய அந்தப் பொருளை நம்முடைய கைக்குக் கொண்டு வருகிற வகையிலே அன்புடைய பொருளாக,

     அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
        அன்பெனும் குடில்புகும் அரசே 
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
                                                (திருஅருட்பா-3269)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/233&oldid=1292391" இலிருந்து மீள்விக்கப்பட்டது