பக்கம்:அருளாளர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * அருளாளர்கள்

18


18 அருளாளர்கள்

நன்கு அறிந்த மூலர் இதனை மேலே கண்ட பாடலில் எடுத்துக் கூறுகிறார்.

இனி யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை என்பன பற்றியும் அரசன் செங்கோல் என்பவை பற்றியும் பேசியமையாலும் இவ்வுலக வாழ்க்கையாகிய புறவாழ்க்கை நன்கு அமைய வேண்டிய சூழ்நிலையைப் பேசியுள்ளார். அவ்வாறு இல்லாவிடின் மந்திர மறைப் பொருள்களைப் பேசவந்த அவர் நிலையாமை முதலியவற்றைப் பேசுவானேன்? நம்மாட்டுக் கொண்ட கருணையால் நம்மைத் தட்டி எழுப்பவே இவற்றை எல்லாம் பாடினார் என்பதே பொருத்தமாகும். ஒன்றுக்கொன்று முரணாகக் காணக் கூடியவற்றைக்கூட இவர் பேசியுள்ளார். ஒரு பாடலில் உடம்பின் இழிவைக் கூறப்புகுந்து பானை உடைந்தாலும் ஓடாவது எஞ்சும், உடம்பிலுள்ள உயிர் பிரிந்தால் இறைப்போதும் அதனை வைத்திருக்க மாட்டோம் என்று பேசும் அவரே,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே ‘

(திருமந்திரம்-724)

என்றும் பாடுவது என் கருதி?

நம்மிடத்தில் ஒரு பொருள் கொடுக்கப்பட்டால் அதனைப் பயன்படுத்த வேண்டிய முறையிற் பயன் படுத்த வேண்டும். இன்றேல் அப்பொருள் தோன்றிய நோக்கமும் கெட்டு நம்மிடம் வந்து சேர்ந்ததன் பயனையும் இழக்கிறது. செல்வம் என்பது பிறர் துயரம் துடைக்கப் பயன்படல் வேண்டும். செல்வத்துப் பயனே ஈதல்’ என்று பேசிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/27&oldid=1291495" இலிருந்து மீள்விக்கப்பட்டது