பக்கம்:அருளாளர்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகத்தில் விஞ்ஞானம் 49

அண்டத்தைச் சுற்றிவர இயலாதபடி அதன் பரிதி வட்டம் மிகுந்துகொண்டே செல்கிறது.” இங்குப் பேசப்பெற்ற விரிவின் வேகத்தைக் கணக்கிட்டு ஒருவாறு தருகிறார் ஐன்ஸ்டீன்.

“விண்மீன் மண்டலத்தின் உள்ளே இயங்கும் நமது சூரிய மண்டலம் வினாடிக்கு 13 மைல் வேகத்திலும், இவ் விண்மீன் மண்டலம் பால் வெளிக்குள் (Milky Way) வினாடிக்கு 200 மைல் வேகத்திலும் இப் பால் வெளி இன்னும் தூரத்துள்ள மண்டலங்களை நோக்க வினாடிக்கு 100 மைல் வேகத்திலும் போகின்றன; இவை அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செல்லுகின்றன என்பதே விந்தை’.

“அண்டத்திற்குப் பரிமாணம் என்பதில்லை; ஏன் எனில் அது விரிந்துகொண்டே செல்கிறது. சில

2 It is probable that the radius of space is already increasing faster than the velocity of light, and this rate of expansion will grow greater. Already it would be impossible for a ray of light to go all round the world, for the circumference of the world is growing faster than light could overtake it. - J.W.N. Sullivan in “Limitations of Science”, Page 21.

3 The entire solar system, moreover, is moving within the local star system at the rate of 13 miles a second; the local star system is moving within the Milky Way at the rate of 200 miles a second; and the Milky Way is drifting with respect to the remote external galaxies at the rate of 100 miles a second -- and all in different directions!" A distant universe in the constellation of Bootes has been found to be receding with a velocity of 24,300 miles a second.” -- The Universe & Dr. Einstein’, Page 44 & ‘Life in Other Words’, Page 19.