பக்கம்:அருளாளர்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகத்தில் விஞ்ஞானம் 51

'உடைக்க முடியாதது' என்ற பொருள்பட இதற்கு அணு (atom) என்று பெயரிட்டார். ஆனால், இற்றை நாளில் இவ் அணுவை உடைத்து இதனுள் ஓர் உலகமே இயங்குகிறது எனக் கூறுகிறார்கள். அணுவினுள் அடங்கி இருக்கும் இவ்வியத்தகு தன்மையைத்தான் அடிகள் 'அணுத்தரு தன்மையில் ஐயோன்' என்று கூறினார் போலும். ஐயோன்’ என்ற சொல்லுக்கு 'மிகச் சிறியவன் என்பது ஒரு பொருள். 'ஐ வியப்பாகும்’ என்ற தொல்காப்பியனார் கருத்துப்படி அணுவினுள் வியத்தகு முறையில் மின் அணுவாய், (Electron) பரமாணுவாய் (Proton), நியூட்ரானாய் (Neotron), பாசிட்ரானாய் (Positron) விளங்கும் சக்தி வடிவங்களைத் தான் அடிகளார் குறிப்பிட்டாரோ, ஏதோ அறியோம்!

இனி முக்கூட்டுப் பரிமாணம் உடைய உலகத்தையும் (எல்லா உலகங்களும் இச் சொல்லால் குறிக்கப் பெறுகின்றன் ) அவ்வுலகம் தோன்றி அழிய இடந்தருகின்ற விசும்பையும் ஆசிரியர் அறிந்திருந்தது வியப்பன்று. 'காலம்’ என்று கூறப்பெறும் ஒன்றை இம் மூன்று பரிமாண முடைய உலகத்தோடு தொடர்புபடுத்திக் கூறுவதுதான் வியப்பினும் வியப்பாகும்! திருவாசகத்தில் 47ஆவது பாடலாக வரும் இப் பாடலைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“மேலை வானவ ரும்அறி யாத(து)ஓர் கோல மேளனை ஆட்கொண்ட கூத்தனே! ஞால மே!விசும் பேஇவை வந்துபோம் கால மே! உனை என்றுகொல் காண்பதே?”

திருவா-5 : 47

“ஞாலமாகவும், விசும்பாகவும், இவை இரண்டும் தோன்றி மறைதற்குக் காரணமாகவும் நிலைக்களமாகவும் உள்ள