பக்கம்:அருளாளர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Vi

தாயுமானார், வள்ளலார் என்ற இரண்டும் வானொலியில் பேசப்பட்டதே ஆகும். நடராசத் தத்துவம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை, நாட்டியம் பயில்விக்கும் ஒரு பள்ளியின் பயிலரங்கில் பேசப் பெற்றதாகும். -

இறுதியாக உள்ள யோகசுவாமிகள் என்ற கட்டுரை முப்பத்தைந்து ஆண்டுகள் முன்னர் எனக்குப் புதுவாழ்வு தந்து, என்னைப் பணிகொண்ட ஒரு மாபெரும் சித்தருடைய வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவங்களைத் தொகுத்து எழுதியதாகும்.

பல்வேறு காலப் பகுதியில் எழுதப்பெற்றவை ஆதலின் நடையில் வேறுபாடுகள் மிகுந்து காணப் பெறும். அவை ஓரளவுக்கு எனது உணர்ச்சியையும் குறிப்பவை ஆகும். -

வழக்கம் போல் இதனைத் தொகுத்து, நூல்வடிவம் தந்து வெளியிட உதவிய, ஞா.மீரா, திருமதி சுந்தரி யோகிஸ்வரன் ஆகியவருக்கும் நல்வாழ்த்துக்கள் உரியனவாகும்.

வழக்கம் போல் நூலின் பெரும்பகுதிகளைப் படித்துப் பார்த்து தடை விடைகள் எழுப்பி சில பகுதிகளை மீண்டும் எழுதுமாறு செய்த இதய மருத்துவ நிபுணர் டாக்டர் N. சிவராசன் M.D. அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். -

படி திருத்தும் பணியில் தொடங்கி புதிய சிந்தனைகளுக்கு இடம் தந்து அவற்றையும் எழுதச் செய்த செல்வன் காளப்ப சேதுபதிக்கும் நல்வாழ்த்துக்கள் உரியன.