தவத்திரு குன்றக்குடி அடிகளார்
31
அருள்நெறி முழக்கம்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
என்ற குறளை நினைவுறுத்திக் கொள்வாயாக. நன்றியை மறவாதே! மறந்தால் வாழ்வு இல்லை என்பன ஆன்றோர் அருள்மொழிகள், உலகமே தலைகீழாக மாறினாலும் ஒருவன் செய்த நன்றியை மறவக்கூடாது. நன்றியை மறந்து வாழ்பவன் மனித உருவில் வாழ்கின்ற மற்றொன்று தான் கண்ட கடவுளை ஒன்றில் கண்டு மகிழ்ந்து , வாழ்த்தி, வணங்கி வழிபட்டு நின்று நன்றி செலுத்த நினைத்தான் பழங்காலத் தமிழன். இது அறிவியல் கூறவில்லை; அருளியல் கூறுகின்றது. பரிபூரணமாகப் பயன்தர உருவகத்தை உண்டு பண்ணினான். கோவில்களில் இருக்கின்ற காணப்படுகின்ற அனைத்தும் விஞ்ஞானத்தைக் காட்டுகின்றன.
மனித சமுதாயம் கடவுளைக் காண வேண்டுமேயானால் மக்களினத்திற்கு அருளியல் கலந்த அறிவியல் வேண்டும். கடவுளைக் கல்லில் கண்டு வணங்க மறுக்கின்றவர்கள் ஒரு கொடிக்கு மதிப்புக் கொடுத்து வணக்கம் செலுத்துகின்றார்கள். அதனை ஒப்புக்கொள்ளும் அவர்கள், உலகம் கண்ட முழுமுதற் கடவுளை உருவங்களில் கண்டு வணங்குவதை மறுக்கின்றனர். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! அப்பொழுதுதான் எது பகுத்தறிவு? எது பைத்தியக்காரத்தனம்? என்பது நன்கு தெரியும். அரிச்சுவடி படிக்காதவரிடம் வித்வான் படிப்பைப் பற்றிக் கூறினால் என்ன தெரியும்?
அதனைப் போலவேதான் அருளியல் கலவாத வெறும் அறிவியற் பிண்டமானவர்களின் கடவுட் கொள்கையைப் பற்றிக் கூறுவதுமாகும். இந்த உலகில் ஒரே கடவுள்தான் உண்டு. சமயப் பெரியவர்கள் காலத்திற்கும், கருத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர் கொடுத்து அதன் வழியில் மக்களைப் பழக்கி நல்வழியில் இட்டுச் செல்கின்றார்கள். உடல் வியாதிக்கு ஏற்ப மருந்துகளைக் கொடுத்து வியாதியைப் போக்க கடவுள்