உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

37

அருள்நெறி முழக்கம்


இத்தகு பேரன்பு படைத்த கழகங்களுக்கு நமது உளங்கலந்த வாழ்த்து. மீண்டும் ஒருமுறை சமயவாழ்வுடையார் அனைவரும் ஒன்றுபட்டுத் திருத்தொண்டின் நெறி பேணி வளர்க்கத் துணைசெய்யும் வண்ணம் எல்லாம்வல்ல இறைவனை வாழ்த்தி வணங்கி வழிபட்டு நிற்கின்றோம். அவனது இணையடிகளை நோக்கி இதயம் கலந்த பிரார்த்தனையைச் செய்கின்றோம். அன்பர்களது அன்பு பொருந்திய ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். பணியைத் தலைமேற்கொண்டு தொண்டு செய்யும் தொண்டர்களுக்கு எமது உளம் கலந்த நன்றியும் வாழ்த்தும்.

வாழ்க தமிழ்!

வளர்க அருள்நெறி!


“என்றும் வேண்டும் இன்ப அன்பு”தூத்துக்குடியில் தவத்திரு அடிகளார் ஆற்றிய உரை