பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

70

அருள்நெறி முழக்கம்


“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்”

உலகத்தார் உண்டு என்று சொல்லுகின்ற பொருளை இல்லை என்று சொல்லுகின்றவர்கள் வையத்தில் பேயாக மதிக்கப்படுவார்கள்.

திருவள்ளுவர் நூலைப் போலத் தலைசிறந்த நூல் வேறில்லை என்று சொல்லலாம். அதிலே கூடச் சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வேண்டாத பகுதிகளைத் தள்ளி விடுகின்றார்கள். அவர்கள் திருவள்ளுவரை முழுதும் கண்டார்களா என்றால் இல்லை. திருவள்ளுவரைப் பற்றி இன்று வருகின்ற ஆராய்ச்சியைப் பார்த்தாலே நீங்கள் வருத்தம் கொள்வீர்கள். தமிழகத்திலே பிறந்த திருவள்ளுவருக்கு இந்த நிலை. “ஒரு நல்ல மனிதனைக் கொல்லுவதை விட ஒரு நல்ல புத்தகத்தைக் கொல்லுதல் கொடுமையுடையது” என்று மில்டன் கூறுகின்றார். ஒரு நல்ல மனிதரைக் கொன்றுவிட்டால் அவரைச் சார்ந்தவர் அவரோடு தொடர்புடைய பலர் இந்த நாட்டிலே அந்த உணர்ச்சியைப் பரப்புவார்கள். ஏசு கிறித்து மறைந்து விட்டாலும்கூடப் பல ஆண்டுகளாக அவருடைய அறவுரைகள் உலகம் எங்கும் பரப்பப்பெறுகின்றன.

திருவள்ளுவர் நூலுக்குப் பத்துப்பேர் உரை எழுதியிருக்கின்றார்கள். குழந்தையுரை என்று ஒன்று வெளிவந்திருக்கின்றது. திருவள்ளுவர் இன்று இந்த நாட்டில் வாழ்ந்தால் இவ்உரையைப் பார்த்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பார். இப்படியெல்லாம் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்பொழுது கற்பவை கற்க என்று சொல்ல வேண்டுவது அவசியம் எனக் கருதுகின்றோம். கடைப்பிடிக்க வேண்டிய மொழியது.

பண்டைத் தமிழக இலக்கியங்கள் அனைத்தும் நன்மையையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. தீமையின் பெயரைச் சொல்லக்கூடத் திருவள்ளுவர் அஞ்சி நல்லனவற்றின்