உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 97 இங்ஙனம் வரும் வழியில் உயர்ந்த மலைப்பகுதியி லிருந்து முதன் முதலில் நூறு அடிக்குக் கீழே விழுகின்றது. நூறு அடி உயரத்திலிருந்து விழுவ தால் இச்சிற்றாற்று நீர் மலர்களைப்போலச் சிதறி விழுகின்றது. இது தேன் போன்று மெல்லிய ஒழுக்குடையது; பார்க்க இனிமையாக இருப்பது; பக்கத்தில் தேன் கூடுகளை மிகுதியாக உடையது. இக்காரணங்களால் இவ்வருவிக்குத் தேன் அருவி என்பது பெயராயிற்று. இந்த அருவி மலையடி வாரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று கல் தொலைவில் அமைந்திருக்கிறது. இவ்வருவியைச் சூழ உள்ள இடம் இயற்கையன்னை கொலு வீற்றிருக்கும் இன்ப டம் என்று கூறலாம். தேனருவிநீர் சிற்றாறாக ஒன்றரைக் கல் வரை மலைப்பகுதியிலேயே பாய்கின்றது; ஒன்றரைக் கல் தாண்டியதும் இவ்யாறு செண்பக மரங்கள் நிறைந்த காட்டுவழியே பாய்கின்றது; அங்கு ஓரிடத் தில் முப்பதடி உயரமுள்ள அருவியாக விழுகின்றது; அதனால் செண்பக அருவி எனப் பெயர் பெறுகின்றது; இவ்யாறு மேலும் கீழ் நோக்கி ஏறத்தாழ ஒன்றரைக் கல் தொலைவு பாய்கின்றது. அவ்விடத்தில் மாமரங் கள் அடர்ந்த காடு காணப்படுகின்றது. அக்காட்டி லுள்ள இவ்யாற்றின் துறை மாவடித் துறை எனப் பெயர் தாங்கியுள்ள ளது. மாவடித் துறையைத் தாண் டிச் செல்லும் சிற்றாறு இருநூற்று எண்பத்தெட்டு அடி உயரத்திலிருந்து அருவியாக விழுகின்றது. ஆயின், இஃது இருநூற்று எண்பத்தெட்டடி 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/101&oldid=1693061" இலிருந்து மீள்விக்கப்பட்டது