________________
100 துணைப் பாடம் 6 என் அமைகின்றன. இக்காற்றுச் சாரற்காற்று' றும், மழை 'சாரல்' என்றும் பெயர் பெற்றுள்ளன. இச்சாரற் காற்றும் 'சாரல்' என்னும் இளமழையும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றால மலையை அடுத்துள்ள பகுதியிற் கிடைக்கின்றன. இம்மாதங்களைச் 'சாரற் காலம்' என்றும் இப்பகுதியி னர் வழங்குகின்றன ர். இங்கு வீசும் தென்றற் காற்று, உடல் வெப் பத்தை மாற்றிக் குளிர்ச்சியைக் கொடுக்கும். குற்றால அருவி சாரற் காலத்திலும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் மிகுதியாக நீரைச் சொறியும். அருவி நீர் தன் போக்கில் மலைமீதுள்ள மூலிகைகளைத் தழுவி வருகின்றது. இதனால் அம் மூலிகைகளின் சத்துக் கள் நீரில் கலந்து கிடக்கின்றன. அருவி நீரின் விரைவு மின்சார அணுக்களைத் தோற்றுவிக்கிறது. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து அருவியில் நீராடு வோர்க்கு உடல் நலத்தை அளிக்கின்றன. சாரற் காலத்தில் அருவியில் நீராடுதல் சிறந்த பயனைத் தருகின்றது. உடலைப் பற்றிய நோய்களும் தோலைப் பற்றிய நோய்களும் நீங்குகின்றன; கடும்பசி உண்டாகின்றது; உடல் வலுக்கின்றது; ஊக்கம் மிகு கின்றது. அருவியிலிருந்து உயிர்வாயு அம்சங்கள் மிகுதியாய் அடங்கிய ஒரு வகை இளங்காற்று வீசுகின் றது. அக்காற்று உடலுக்கு மிக்க நன்மையைத் தரு கின்றது. உடல் மெலிந்தோரும், வலிமை குறைந் தோரும் சில நோய்களால் துன்புறுவோரும் சாரற் காலத்தில் மலைமீதும் நிலத்திலும் உள்ள பாதைகளில் உலாவி, அருவிகளில் நீராடி மகிழ்வர். இங்ஙனம்