உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 துணைப் பாடம் வெற்றி கண்ட இருவரைப்பற்றிய விவரங்களை அறி யின், இன்றைய குபேர நாட்டிற்கு அடிகோலிய பெரு மக்களின் அயரா உழைப்பை நாம் நன்கு உணர லாம். உழைப்பாளர் இருவர் வட அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகள் ஆகியும், அதன் மேற்குக் கரை கண் டறியப்படாமலே இருந்தது. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைத்தொடரும், இருள் அடர்ந்த காடுகளும், அங்கங்கு வாழ்ந்த அமெரிக்க இந்தியர் தொல்லையுமே மேற்குக் கரை யைக் கண்டறியத் தடையாக இருந்தன. கி.பி. 1803இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராயிருந்த * ஜெப்பர்ஸன் என்பவர் மேற்குக் கரை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று விரும்பினார். அவர், படைத்தலைவர் லூவிஸ் என்பவரையும் தமது அந்தரங்கச் செயலாளரான படைத்தலைவர் கிளார்க்கு. என்பவரையும் இம்முயற்சியில் ஈடுபடுமாறு வேண்டி னார். அப்பெரியார் அவர்களை நோக்கி, "மிசௌரி' என்னும் ஆற்று வழியே மேல் நோக்கிச் சென்று, அந்த ஆறு தோன்றும் இடத்தை அடைக; அங்கி ருந்து ராக்கி மலைத்தொடரைக் கடந்து செல்லுக; பிறகு மேல்கடல் நோக்கிப் பாயும் ஓர் ஆற்று வழியே. சென்று, மேல் கடலைக் கண்டு வருக. நீங்கள் செல் லும் பகுதிகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெளிவாக அறிந்து வருக." என்று கூறி வழியனுப் பினார். Jefferson

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/14&oldid=1692974" இலிருந்து மீள்விக்கப்பட்டது