16 L துணைப் பாடம் என்று ஆற்றின் போக்கை எதிர்த்துச் சென்றனர்; அதே ஆண்டு நவம்பர் முதல் நாள் டகோட்டா இப்பொழுது வழங்கும் நாட்டின் தென் பகுதியில் தங்கி மாரிக்காலத்தைப் போக்கினர்; மிசௌரி ள செயின்ட் மிசிசிப்பியுடன் கலக்கும் இடத்திலுள்ள லூயி என்னும் நகரத்திற்குத் தம்முடன் வந்தவருள் பதினான்குபேரை அனுப்பி, அங்கு இருக்கும்படி ஆணையிட்டனர். பின்னர்ப் படைத் தலைவர் இருவரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் எட்டாம் நாள் புறப் பட்டு மேற்கு நோக்கிச் சென்றனர். அவர்களுக்கு உதவியாகக் கனடாவைச் சேர்ந்த ஒருவனும், அவன் மனைவியும் உடன் சென்றனர். அப்பெண்மணி தன் சிறு குழந்தையைத் தன் முதுகில் கட்டிக்கொண்டு வழி நடந்தாள். அவள் தன் இளமைப் பருவத்தில் அக்காட்டுப் பகுதிகளில் தன் பெற்றோருடன் சுற்றித் திரிந்தவள். ஆதலால் அவள் மிகுந்த ஊக்கத துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் வழிகாட்டிச சென்றாள். " அவளது உதவி பெற்ற படைத்தலைவர் இரு வரும் தம் வீரருடன் அவள் காட்டிய வழியே சென்ற னர்; தங்களுக்கு முன் எந்த வெள்ளையரும் காலடி எடுத்து வையாத நிலப்பகுதிகளையும் காடுகளையும் கடந்து சென்றனர்; ஆங்காங்கு இருந்த அமெரிக்க இந்தியருடன் நட்புக்கொண்டாடினர்; பல இடங் களில் அவ்விந்தியரின் விருந்தினராகத் தங்கிச் சென் சில இடங்களில் அவர்களோடு போராடி றனர்; வெற்றிபெற்றுச் சென்றனர்.
- Dakota