உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நயாகரா அருவி 21 அரை அடி வீதம் ஆறு கீழிறங்கிப் பாய்கிறது; அஃதா வது, மேட்டுப் பகுதியிலுள்ள ஈரி ஏரியிலிருந்து பாயும் நயாகரா ஆற்று நீர், செல்லச் செல்லப் பள்ள மாக உள்ள நிலத்தில் பாய்கின்றது. கடைசி ஏழு கல் தொலைவில் ஆறு மொத்தம் அரை அடி அளவே கீழிறங்கிப் பாய்கிறது. இடைப்பட்ட ஏழு கல்தொலை வில் குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து நயாகரா ஆறு கிழக்கிலும் மேற்கிலும் இரண்டாகப் பிரிந்து திடீ ரெனப் பாய்கின்றது. இங்ஙனம் அருவிகளாக விழு முன் ஆற்றின் அகலம் இரண்டு கல்லிலிருந்து ஒரு கல் அளவிற் குறுகுகிறது. நயாகரா ஆற்றின், ஆறு சதவீத நீர் வலப்பக்கம் விழுகின்றது. அதுவே அமெ ரிக்க ஐக்கிய நாடுகளில் விழும் அருவியாகும். அஃது அமெரிக்க அருவி எனப்படுகிறது. ஆற்றின் எஞ்சிய நீர் இடப்பக்கம் கனடா நாட்டில் விழுகின்றது. அது குதிரை லாட வடிவில் வீழ்வதால் குதிரை லாட அருவி எனப் பெயர் பெற்றது. இவ்விரண்டு அருவிகளின் பொதுப்பெயர் நயாகரா அருவி என்பது. இவ்விரண்டு அருவிகளையும் முதன் முதல் உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் பெல்ஜிய நாட்டுச் சமயப் பிரசாரகரும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்க முற்பட்டவருமான லூயி ஹென்னிப்பின் என்பவரேயாவர். இப்பெரியார் 1697இல் நயாகரா அருவியைப் பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஆற்றின் காலம் இவ்வாறு உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவி யைத் தோற்றுவித்துள்ள நயா க ரா ஆற்றின் காலத்தை அறிய முற்பட்ட ஆராய்ச்சியாளர் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/22&oldid=1692982" இலிருந்து மீள்விக்கப்பட்டது