________________
நயாகரா அருவி 31 தோன்றும்,” என்று ஓர் எழுத்தாளர் இதனைப் பற்றி எழுதியுள்ளார். அமெரிக்க அருவியின் வடகோடியில் 'பிராஸ் பெக்ட் முனை' என்று ஓரிடம் இருக்கின்றது. அங் கிருந்து நியூயார்க் மாகாண த்தையும் கனடாவையும் இணைக்கும் பாலம் வரையில் செல்லும் பொழுதுதான் இரண்டு அருவிகளின் கண்ணைக் கவரும் காட்சி தெளிவாகப் புலப்படும். பின்பு அப்பாலத்தின் வழியே சென்று கனடிய நாட்டில் குதிரை லாட அருவியை அடையும் போதும் அழகிய தோற்றம் காணப்படும். அமெரிக்கப் பகுதியில் பிராஸ்பெக்ட் முனையில் அல்லது ஹென்னிபின் முனையில் நின்று பார்ப் பினும், அல்லது இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட உயரிய இடத்திலிருந்து பார்ப்பினும், இரண்டு அருவி களின் அழகிய பக்கக்காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். பாலத்தைக் கடந்து வெவ்வேறு இடங்களிலிருந்து பார்ப்பின், அருவிகள் இரண்டும் வெவ்வேறு தோற் றங்களைத் தந்து பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். வீரச் செயல்கள் இவ்வருவிகளில் பல வீரச் செயல்கள் பலரால் செய்யப்பட்டுள்ளன. *சாம் பாட்ச் என்பவர் 1829இல் நயாகரா ஆற்றின் ஆழமான பகுதிகளில் இரண்டு முறை குதித்துப் பல விளையாட்டுகளைச் செய்து காட்டியுள்ளார். ஆடவரும் பெண்டிரும் இவ்வருவி களில் நீந்திச் சென்றுள்ளனர். சிலர் நீர்ச் சுழல் களின் வழியே நீந்திச் சென்றனர். 1860இல் ஏழாம் * Sam Patch