உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40. தாய்நாடு திரும்பல் துணைப் பாடம் பல திரும்பிச் செல்லும் முயற்சியிலும் அவர் இன்னல்களை அடைந்தார்; பலநாள் உணவின்றி நடந்தார். அவரிடமிருந்த பொருள்களைக் கள்வர் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு உண்ண உண வின்றி, உடுக்க உடையின்றி, வருந்திய நிலையில் அவர் பைசானியா நகரத்தை அடைந்தார். அங்கு அவரை முதலில் வரவேற்ற டாக்டர் லெயிட்லி என்ற வெள்ளையர் அவருக்கு வேண்டும் உதவிகளைச் செய் தார். உடலைத் தேற்றிக்கொள்ள விரும்பிய பார்க்கு, கப்பலேறி இங்கிலாந்து சென்றார். இதுகாறும் கூறப்பெற்ற இப்பிரயாணம் செய்து முடிக்க இரண் டரை ஆண்டுகளாயின. இரண்டாம் செலவு பார்க்கு சில ஆண்டுகள் ஸ்காட்லாந்திலேயே தங்கியிருந்தார். அவர் தமது முதல் அநுபவத்தை. மனதிற் கொண்டு, தம் இரண்டாம் செலவு எளிதில் நடைபெறத்தக்க நிலையில் பல பொருள்களையும், போர் வீரர் பலரையும், தக்க துணைவரையும் சேர்த்துக் கொண்டு சென்றார்; முன் சென்ற வழியே சென்று, நாடு காண முனைந்தார். நைஜர் ஆற்றை நெருங்கிய போது, கடுங்காய்ச்சல் பலருக்குக் கண்டது. அவருள் அவருக்குப் பெருந்துணைவராக இருந்த வீரர் சிலர் இறந்தனர்; பலர் நோயுற்றனர்; எஞ்சிய சிலருடன் மங்கோ பார்க்கு மேலும் தொடர்ந்து சென்றார். பார்க்கின் மறைவு மங்கோ பார்க்கு வீரர் சிலருடன் நைஜர் ஆற்றில் படகில் சென்றுகொண்டிருந்தார். ஓரிடத்தில் அந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/42&oldid=1693002" இலிருந்து மீள்விக்கப்பட்டது